'ஃபுட் பால்' தான் என் உசிரு...! இனிமேல் என்னால 'விளையாட' முடியாது இல்ல...? 'தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால்...' - 'கால்பந்தாட்ட' வீராங்கனை எடுத்த 'அதிரடி' முடிவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பல திறமையான கலைஞர்கள் ஆப்கானை விட்டு தினமும் வெளியேறி வருகின்றனர்.

அதேபோல் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாகிய ஃபனூஸ் பஷீர் ஆப்கானை விட்டு வெளியேறி உள்ளார். இவர் ஆப்கானிஸ்தான் பெண்கள் தேசிய கால்பந்து வீராங்கனைகளில் ஒருவர்.
இதுகுறித்து கூறும் ஃபனூஸ் பஷீர், 'கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் அனைத்து துறைகளிலும் கால்பதிக்க துவங்கினர். எங்கள் நாட்டு வீராங்கனைகள் விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்காக பல கனவுகளை நாங்கள் கண்டுக்கொண்டிருந்தோம்.
இப்போது ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை வேறாக இருக்கிறது. அதுவும் விளையாட்டுத்துறையில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் இனி துருப்பிடித்து விடும் என தெரிவித்துள்ளார்.
'கடந்த மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து விடுவார்களோ என்கிற அச்சம் எங்களுக்கு இருந்துக்கொண்டே இருந்தது. இனி ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிர்காலமே கிடையாது' என ஃபனூஸ் பஷீர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
'ஆப்கானை தாலிபான் கைப்பற்றிய உடன் நான் என் அடையாளத்தை மறைத்து புர்கா அணிந்து தெருவில் நடந்தேன். நான் ஒரு விளையாட்டு வீராங்கனை என்ற அடையாளத்தை வெளிக்காட்ட முடியாமல் ஆப்கானிஸ்தானில் இருந்தேன்.
சொந்த மண்ணை விட்டு வெளியேறுவது துயரத்தை தரும் விஷயம். இனி நான் என் வாழ்க்கையை மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும்' என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஃபனூஸ் பஷீர்.
ஆப்கானிஸ்தனை விட்டு வெளியேறிய ஃபனூஸ் பஷீர் இப்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தற்போது தஞ்சம் புகுந்துள்ளார்.

மற்ற செய்திகள்
