இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியா நாட்டில் இன்று (14.12.2021) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் மௌமரேவில் இருந்து 95 கிலோமீட்டர் வடக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்தோனேசியாவில் நிலத்தட்டுக்கள் அசைவு காரணமாக அடிக்கடி இதுபோல் நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags : #EARTHQUAKE #INDONESIA #TSUNAMI
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indonesia issues tsunami warning after 7.7 magnitude earthquake | World News.