'என்னது... இந்த ஒரு புத்தகம் ரூ.58 லட்சமா'?.. அப்படி அதுல என்ன தான் இருக்கு!?.. ஏலத்தில் முண்டியடித்துக் கொண்ட மக்கள்!.. வியப்பூட்டும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிக அரிய புத்தகம் ஒன்று, ரூ.58 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சோதேபிஸ் என்பவர் பழமையான கலைப்பொருட்களை சேமித்து வருகிறார். சமீபத்தில், இவர் உலகின் மிகவும் பழமையான கால்பந்து விதி புத்தகம் ஒன்றை, 57,000 பவுண்டுக்கு ஏலத்தில் விடுத்தார்.
இந்திய ரூபாயின் மதிப்பில் இதன் விலை கிட்டத்தட்ட ரூ.58 லட்சம். இந்த ஏலம், சோதேபிஸின் இணையதளத்தின் வழியே நடத்தப்பட்டது. இந்த பழமையான புத்தகத்தின் மதிப்பு அதன் வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், விளையாட்டின் வளர்சிக்கு எப்படி பங்களித்துள்ளது என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரேவ் க்ரேவில் ஜான் செஸ்டர், என்ற மதகுரு ஒருவர் தொகுத்த விக்டோரியன் ஸ்கரப்புக் ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த பிரசுரத்தில் வில்லியம் பேக்கர் பென்சிலால் கையெழுத்திட்டுள்ளார். கமிட்டியின் ஒரு உறுப்பினராக இருந்த இவர், அக்டோபர் 21, 1858ம் ஆண்டு, இந்த விதிகளுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். ஷெஃபீல்ட் கால்பந்து கிளப் நடத்திய தொடர் கூட்டங்களின், கைகளால் எழுதி தொகுக்கப்பட்ட புத்தகம், 1859ம் ஆண்டு அச்சிடப்பட்டது.
ஆனால், ஷெஃபீல்ட் கால்பந்து கிளப் 1857ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது. சர்வேதச கால்பந்தாட்ட கூட்டமைப்பு, FIFA கருத்துப் படி, இந்த கிளப் தான் உலகின் மிகப் பழமையான கால்பந்தாட்ட கிளப் ஆகும். கால்பந்து விளையாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில், இந்த கிளப் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. மேலும், கார்னர் கிக் (corner kick), இன்டைரக்ட் ஃப்ரீ-கிக் (indirect free kick) போன்ற செட்-பீசஸ்களையும் விளையாட்டில் இந்த கிளப் தான் அறிமுகப்படுத்தியது.
இந்த விதி புத்தகம் உருவான ஷெஃபீல்ட் கால்பந்து கிளப்பிடம், அதன் இன்னொரு அச்சு இருந்தது. அதன் வரலாற்று மதிப்பும், விளையாட்டின் வளர்ச்சியில் அதன் பங்கும், அதன் மதிப்பை உயர்த்தியது. இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய்க்கு 2011ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அந்த காலகட்டத்தில், இது மிகப்பெரிய நினைவுச்சின்னமாகும். தற்போது, மிச்சமிருக்கும் ஒரே ஒரு புத்தகம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏலம் விடப்பட்டுள்ளது.
புத்தகம் மற்றும் கையெழுத்துப் பிரதி நிபுணரான சோதேபிஸ், தி ஸ்டாருக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "இந்த அற்புதமான புத்தகம், அழகான இந்த விளையாட்டின் ஆரம்ப நாட்களுக்கு கொண்டு சென்றது. அதாவது, கிட்டத்தட்ட 160 ஆண்டுகளுக்கு முன் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் கால்பந்து விளையாட்டு எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் பற்றி இந்த புத்தகத்தின் மூலம் அறியலாம். இன்று நாம் அறிந்திருக்கும் நவீன கால்பந்து விதிமுறைகள் மற்றும் பழக்கங்களின் தொடக்கம் ஆகியவற்றை இந்த புத்தகத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
