"நைட் தூங்கப் போறப்போ என் கண்ணை கட்டிடுவாரு".. ஆன்லைனில் அரும்பிய காதலால் வந்த சோகம்.. 10 மாசத்துக்கு அப்பறம் மனைவிக்கு தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேஷியாவில் ஆன்லைனில் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண், தான் மணந்துகொண்டது ஒரு பெண் என்பதை 10 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடித்திருக்கிறார்.

ரகசிய திருமணம்
இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் ஆன்லைன் டேட்டிங் அப்ளிகேஷன் மூலமாக ஒருவருடன் அறிமுகம் கிட்டியிருக்கிறது. தன்னை அறுவை சிகிச்சை நிபுணர் என்று அறிமுகம் செய்துகொண்ட அந்த நபர் சொந்தமாக தொழில்செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய இளம்பெண்ணும் அவருடன் வழங்கி வந்திருக்கிறார். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். தன்னிடம் எவ்வித சான்றுகளும் இல்லை எனக்கூறிய அந்த நபர், ரகசியமாக திருமணம் செய்துகொள்ளலாம் என இளம்பெண்ணை வற்புறுத்தியிருக்கிறார்.
வீட்டோட மாப்பிள்ளை
இந்நிலையில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து மணமகளின் வீட்டிலேயே தங்கியிருக்கிறார் மாப்பிள்ளை. அப்போது, இளம்பெண்ணிடமும் அவரது குடும்பத்தினரிடமும் பணம் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார் அவர். இதுவரையில் 17 லட்சம் வரையில் பெற்ற அவர் அதன்பிறகு தெற்கு சுமத்ரா பகுதியில் தனி வீடு எடுத்து தனது மனைவியுடன் வசிக்க துவங்கியுள்ளார்.
ஆனாலும், தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இளம்பெண் தனது வீட்டில் இதுகுறித்து கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார். இதனை அறிந்த மாப்பிள்ளை, இளம்பெண்ணையும் அவரது வீட்டினரையும் பிரிக்க முயற்சித்திருக்கிறார்.
புகார்
அடிக்கடி பணம் கேட்டு தகறாரில் ஈடுபட்டு வந்ததால் கோபடைந்த இளம்பெண், தனது கணவரின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்டறிந்துள்ளார். இதனையடுத்து, ஒருநாள் தங்களது மகளை மீட்டுத் தருமாறு பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். அப்போது காவல்துறையினர் இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தனது கணவர் ஒரு பெண் என கூறி அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார் அவர்.
"தினமும் இரவு தூங்க செல்லும்போது தனது கண்களை கட்டிவிடுவார்" என்றும் அவர் ஒரு பெண் என்பதை சில நாட்களுக்கு முன்னர் தான் கண்டுபிடித்ததாக காவல்துறையினரிடத்தில் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் அந்த இளம்பெண்.
பெருகும் ஆதரவு
இந்த வழக்கு இந்தோனேஷியா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது சோகத்தை சமூக வலை தளங்களில் அந்த இளம்பெண் பதிவிட, நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தோனேஷியாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண், தனது கணவர் ஒரு பெண் என 10 மாதங்களுக்கு பிறகு கண்டறிந்தது உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
