'வானத்து நிலவு சின்னதடி'.. காதலியுடன் ரொனால்டோ துபாயில் ரொமான்ஸ்.. மிரள வைத்த ஒரு நாள் செலவு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதுபாய் : தன்னுடைய காதலிக்கு ரொனால்டோ கொடுத்த பிரம்மாண்டமான பிறந்தநாள் பரிசு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அதிகம் வைரலாகி வருகிறது.

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டு கால்பந்து அணியின் கேப்டனான ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் ஆடி வருகிறார்.
கிரிக்கெட்டில் சச்சின், தோனிக்கு உலகெங்கிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போல, ரொனால்டோவிற்கும் ஏராளமான ரசிகர்கள், உலகெங்கிலும் உள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
கால்பந்து போட்டியின் நம்பர் 1 வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னுடைய காதலியும், மாடலிங் நடிகையுமான ஜார்ஜினா ரோட்ரிக்சுடன் துபாயியல் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ரொனால்டோவின் காதலி ஜார்ஜினாவின் பிறந்தநாள் தினத்தை அவர்கள் கொண்டாடியுள்ளனர்.
பிரம்மாண்டமான பரிசு
ஜார்ஜினாவுக்கு மிகவும் வித்தியாசமாக, அதே வேளையில் சற்று பிரம்மாண்டமான பரிசு ஒன்றைக் கொடுக்க எண்ணிய ரொனால்டோ, துபாயில் அமைந்துள்ள உலகின் உயரமான கட்டிடமான் புர்ஜ் கலீஃபாவில், "ஹேப்பி பர்த்டே ஜியோ" என்ற வாசகத்துடன் ஜார்ஜினாவின் புகைப்படத்தை ஒளிரச் செய்து, தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். அப்போது அவர்களின் குழந்தைகளும் உடன் இருந்தனர்.
புர்ஜ் கலீஃபா
உலகின் உயரமான புர்ஜ் கலீஃபாவில், 3 நிமிட வீடியோவை ஒளிபரப்புவதற்கு சுமார் 50,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 50 லட்சம் ரூபாய்) வரை செலவாகும் என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், ரொனால்டோ பதிவிட்டுள்ளார். ரொனால்டோ - ஜார்ஜினா ஜோடிக்கு ரசிகர்கள், வாழ்த்துக்களை அதிகம் பகிர்ந்து வரும் நிலையில், காதலிக்கு ரொனால்டோ அளித்த பிறந்த நாள் பரிசின் வீடியோக்களும் அதிகம் வைரலாகி வருகிறது.
அடுத்த குழந்தை
முன்னாள் காதலி மூலம் ரொனால்டோவிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், ஜார்ஜினா மூலமாக ஒரு இரட்டைக் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
அது மட்டுமில்லாமல், தங்களின் அடுத்த இரட்டைக் குழந்தைகளை இந்தாண்டு வரவேற்கவுள்ளதாகவும் ரொனால்டோ - ஜார்ஜினா ஜோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
