Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top

சில கிலோமீட்டர் நடந்து போய்.. ஆட்டோவில் ஏறி பயணம் செஞ்ச MERCEDES BENZ சிஇஓ.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Oct 01, 2022 10:45 AM

இன்றைய காலகட்டத்தில், நாட்டின் பெரும்பாலான நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகம் இருக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Mercedes Benz indian ceo travelled in auto rickshaw

குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு இடம் நாம் செல்ல வேண்டுமென்றால், அதற்கு முன்பே தயாராகி நாம் கிளம்பினால் தான் சரியாக நேரத்திற்கு அங்கே சென்று சேர முடியும். இல்லையெனில், டிராபிக்கில் சிக்கிக் கொண்டு ஒரு வழியாகி விடுவோம்.

அப்படி இருக்கையில், இந்திய போக்குவரத்து நெரிசல் மத்தியில் Mercedes Benz நிறுவனத்தின் இந்தியன் சிஇஓ செய்த விஷயம் தொடர்பான நிகழ்வு ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்தியன் சிஇஓ ஆக இருப்பவர் Martin Schwenk. இவர் புனே நகரத்தில், S கிளாஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாகி உள்ளது.

Mercedes Benz indian ceo travelled in auto rickshaw

மேலும் இந்த டிராபிக் ஜாமில் நகர கூட முடியாத அவஸ்தையில் மார்டினின் கார் நின்றுள்ளது. இதனால், உடனடியாக தான் சேர வேண்டிய இடத்திற்கு நேரத்தில் சென்றடைய ஒரு அசத்தல் திட்டமும் போட்டுள்ளார். காரில் இருந்து இறங்கி சில கிலோமீட்டர்கள் நடந்து சென்ற மார்ட்டின், ஆட்டோ ஒன்றில் ஏறி மீதி தூரம் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மார்ட்டின் பகிர்ந்துள்ளார். ஆட்டோவில் இருந்த படி, புகைப்படம் ஒன்றை பகிர்ந்த மார்ட்டின், "உங்கள் S கிளாஸ் பென்ஸ் புனே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வீர்கள்?. ஒரு சில கிலோமீட்டர் நடந்து சென்று பின்னர் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை பிடிக்கலாமா?" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mercedes Benz indian ceo travelled in auto rickshaw

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆட்டோவில் சென்ற பதிவு, இணையவாசிகள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags : #MERCEDES BENZ #CEO #AUTO RICKSHAW #MARTIN SCHWENK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mercedes Benz indian ceo travelled in auto rickshaw | India News.