'இந்தியா இத பண்ணலனா'... 'டி20 வேர்ல்ட் கப்-ல பாகிஸ்தான் ஆடாது!'... 'பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி'... 'ரசிகர்கள் அதிர்ச்சி'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Jan 26, 2020 12:12 AM

ஆசிய கோப்பை விளையாடுவதற்காக, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

pak wont participate in t20 wc if india doesnt come to pak

பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி, நீண்ட காலமாக பாகிஸ்தான், தன்னுடைய நாட்டில் சர்வதேச தொடர்களை நடத்துவதிலுருந்து விலகி இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 20 ஓவர் ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இயங்கி வருகிறது. பாகிஸ்தானுக்குச் சென்று இந்திய அணி, 20 ஓவர் ஆசிய கோப்பையை விளையாடும் நிலைப்பாட்டை இன்னும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.

இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் வாசிம் கான், "பாகிஸ்தானில் 20 ஓவர் ஆசிய கோப்பையை நடத்த வேண்டும் என்பது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முடிவு. அதை மாற்ற நினைப்பது சரியான போக்கு அல்ல" என்று தெரிவித்தார்.

மேலும், "நாங்கள் தற்போது ஆசிய கோப்பையை நடத்த இரு இடங்களைத் தேர்வு செய்துள்ளோம். ஒரு வேளை பாகிஸ்தானில் நடக்கப் போகும் ஆசிய கோப்பையை இந்திய அணி புறக்கணித்தால், 2021ம் ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும்" என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.

Tags : #CRICKET #INDIA #PAKISTAN