'I CAN'T BREATHE'... அமெரிக்காவில் 'ஓங்கி ஒலிக்கும்' முழக்கம்... இதற்கு காரணம் 'கொரோனா அல்ல...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கருப்பின இளைஞர் பிளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெற்று வரும் போராட்டங்களில், அவர் கடைசியாக உச்சரித்த 'I can't breathe'... என்ற வாசகத்தை போராட்டக்கார்கள் முழங்கி வருகின்றனர்.
அமெரிக்காவில் மின்னிசோட்டா மாகாணத்தில் அமைந்துள்ள மின்னிபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஒருவரை கைது செய்ய முயன்ற போது, போலீஸ் அவரை கீழே தள்ளி முழங்காலால் அவரது கழுத்தை நெருக்கிய வீடியோ வெளியானது.
அதில், 'I can't breathe'... என அந்த இளைஞர் கூறிய வாசகம் காண்போரை கலங்கச் செய்தது. பின்னர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜார்ஜ்பிளாய்ட் என்ற அந்த இளைஞர் உயிரிழந்தார்.
இதையடுத்து கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அடங்குமுறை அமெரிக்காவில் நீடிப்பதாகக் கூறி பல்வேறு இடங்களிலும் இளைஞரின் மரணத்துக்கு நீதிகேட்டு போராட்டங்கள் வெடித்தன. லாஸ் ஏஞ்சலுஸ், சிகாகோ, மியாமி, அட்லாண்டா, பிலடெல்பியா, டென்வர், சின்சினாட்டி, போர்ட்லாண்ட், கெண்டக்கி, ஓரிகன் போன்ற பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
போராட்டக்காரர்கள் உயிரிழந்த இளைஞர் இறுதியாக உச்சரித்த 'I can't breathe'... vன்ற வாசகத்தை முழக்கமிட்டவாறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காலம் காலமாக நடைபெற்று வரும் இந்த அடக்குமுறையால் எங்களால் நிம்மதியாக மூச்சுவிட முடியவில்லை என்பதை குறிப்பிடும் வகையில், இந்த குரல் அமெரிக்கா எங்கும் ஓங்கி ஒலித்து வருகிறது.