'ஆக்ராவில்' பலத்த 'காற்று, இடியுடன்' மழை... 'தாஜ்மஹால் மீது இடி தாக்கியதா?...' 'அய்யோ!' 'தாஜ்மஹாலுக்கு' என்ன ஆச்சு?...
முகப்பு > செய்திகள் > இந்தியாஆக்ராவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து, தாஜ்மஹாலின் மீது இடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மும்தாஜ் கல்லறை மேற்கூரை சேதமடைந்துள்ளதாக தொல்லியல் துறை கூறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நேற்றிரவு சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலும் இந்த காற்று மற்றும் இடியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாஜ்மஹால் மீது இடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்திருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாஜ்மகாலை சுற்றி பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட தடுப்புகள், மண்பாண்ட அடுக்குகளில் மேற்புரத்தில் உள்ள இரண்டு மண்குடுவைகள் போன்றவை இந்த இடி மற்றும் காற்றால் சேதமடைந்துவிட்டதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தாஜ்மகாலை சுற்றியுள்ள ஏராளமான மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
இதனிடையே கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தாஜ்மகாலுக்கு செல்லும் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
