"நைட் ஃபுல்லா கெட்ட கனவா வருது.. CLASS வரவே பயப்படுறாங்க!!".. ஆசிரியரின் ‘செயலால்’ கல்வி நிலையம் எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 29, 2020 06:26 PM

பிரான்சில் (France) உடல் முழுவதும் டாட்டூ பதித்துள்ள ஆசிரியர் ஒருவரை பார்த்து மாணவர்கள் பயப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதற்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

French man spent $45,000 for tattoos is banned to teach students

பிரான்சில் Palaiseau பகுதியில் உள்ள Docteur Morere Elementary School ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த 35 வயதான Sylvain Helaine என்பவர் உடல் முழுவதும் tattoo பதித்துள்ளார். இதனால் நர்சரியில் படிக்கும் குழந்தைகள் இரவு முழுவதும் கெட்ட கனவுகளை காண்பதாகவும் அதனால் அவதிப்படுவதாகவும் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை அணுகி புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து 6-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் இருந்து அவரை பள்ளி நிர்வாகம் விடுவித்துள்ளது. தனது 27-ஆம் வயதில் இருந்தே டாட்டூ மீது ஆர்வம் கொண்ட Sylvain Helaine தமது உடல் முழுவதும் டாட்டூ பதித்துள்ளார். இதற்காக அவர் 460 மணி நேரங்களை அவர் செலவிட்டுள்ளதுடன் சுமார் 45 ஆயிரம் பவுண்டுகளையும் செலவிட்டுள்ளார்.

தன் மீதான இந்த புகார் பற்றி பேசிய Sylvain Helaine தன்னை அறிந்தவர்களுக்கு,  எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான், தான் மோசமாக தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. French man spent $45,000 for tattoos is banned to teach students | World News.