'டாய்லெட் பேசின் தான் கொரியர்ல போகுதுன்னு நினச்சா...' - அதுக்குள்ள இப்படி ஒரு சம்பவம் இருக்கும்னு யாருமே நினைக்கல...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கொரியர் சர்வீஸ் மூலம் கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த 25 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரும்பாலும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், மாநிலங்களுக்கும் இடையே பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் பெயர்போன இடம் சென்னை வால்டாக்ஸ் சாலை.
இந்நிலையில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் இயங்கும் ஒரு பார்சல் சர்வீஸ் நிறுவனம் மூலம் கேரளா அனுப்ப சுமார் 15 மரப்பெட்டிகளில் வெஸ்டர்ன் டாய்லெட் பேசின்களும் தயாராக இருந்துள்ளது. இதைக்கண்ட அந்த பார்சல் சர்வீஸ் நிறுவனம் தங்களிடம் உள்ள பெட்டியில், ஏதோ போதைப் பொருள் போன்று இருப்பதாக உணர்ந்து, இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு கடத்தப்படுவதாக தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து சோதனை மேற்கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் 15 மரப்பெட்டிகளில் வெஸ்டர்ன் டாய்லெட் பேசின்களுடன் வைத்து, ஒயிட் சிமெண்ட் பாக்கெட்டுகள் வடிவில் கடத்தப்பட இருந்த 25 கிலோ சூடோ எபிடிரைன் (pseudo ephedrine) போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த போதை மருந்து பொருட்களை எங்கிருந்து யார் அனுப்பியுள்ளனர் மற்றும் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்தும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், பார்சல் சர்வீஸ் நிறுவன ஊழியர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.