இது 'பெரிய சைஸ்' மாஸ்க்... நாங்க பண்றது தான் 'கரெக்ட்...' 'கொரோனா தாக்கத்தால்...' 'ஃபிரான்ஸ்' இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட 'நன்மை...'
முகப்பு > செய்திகள் > உலகம்ஃபிரான்சில் பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக அந்த கட்டுப்பாடு சற்று தளத்தப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதலே இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணியலாமா வேண்டாமா? என்ற விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்றும், இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களுக்கு புர்கா அணிந்து வருவதை யாரும் தடுக்கக்கூடாது என்றும் எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸ் அரசு அலுவலகம் ஒன்றில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது முதல் அங்கு இஸ்லாமியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுத்தனர். பாதுகாப்பு கருதி பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆண்கள் தாடி வளர்க்க எதிர்ப்பு குரல் வந்தது. இஸ்லாமியர்களை வைத்து பிரான்ஸில் மிகப்பெரிய அரசியல் நடப்பதாக பிரான்ஸ் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது கொரோனா தாக்கத்தை முன்னிட்டு குடிமக்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயமாக மாஸ்க் அணிய பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் புர்கா அணிவதே பிரான்ஸ் கலாசாரத்துக்கு எதிரானது என கூறப்பட்ட நிலையில் தற்போது கொரோனா காரணமாக அந்த கட்டுப்பாடு சற்று தளத்தப்பட்டு உள்ளது.
பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளதால் புர்கா அணிவதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. புர்காவை ஒரு பெரிய சைஸ் மாஸ்க் போலவே பிரான்ஸ் அதிகாரிகள் கருதுகின்றனர். இது அந்நாட்டு சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.