‘அடுத்த 2 வாரத்துல.. ஏராளமானோர் ICU-வில் சேர்க்கப்படலாம்!’... ஊரடங்கு தளர்வால், உச்சமாகும் கொரோனா.. எச்சரிக்கை விடுத்துள்ள நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்சில் (France) அடுத்த இரண்டு வாரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் மேலும் அதிகமானோர் சேர்க்கப்படலாம் என்பதால் நாட்டு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே பிரான்சில் புதிதாக கொரோனாவால் (COVID19) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 ஆயிரத்து 975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் 55 நோயாளிகள் சராசரியாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருவதால் நாட்டில் மாதத்திற்கு சராசரியாக 2000 பேர் ஐசியுவில் சேர்க்கப்படுவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இன்னும் நிறைய நபர்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரான்சில் ஊரடங்கு தளர்வால் இந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும், பிரான்ஸ் மக்கள் இதனால் எச்சரிக்கையுடன் இருக்க் வேண்டும் என்றும் கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பிரான்ஸில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
