VIDEO: “ஆத்தாடி.. மறந்துட்டனே!”... காரில் இருந்து இறங்கி வந்த சில நொடிகளில்.. ‘தெறித்து ஓடிய பெண் அமைச்சர்’.. “த்ரில்லான” வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 16, 2020 08:01 PM

பிரான்ஸ் பெண் அமைச்சர் ஒருவர் பதறிப்போய் அங்குமிங்கும் ஓடும் த்ரில்லரான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

French minister Agnès Pannier-Runacher panicked and ran Videoviral

“ஐய்யய்யோ மறந்துட்டேனே” என்று அவர் பதறி ஓடுவதை பார்த்தால் அவர் நடிக்கிறார் என்பது போன்று இல்லை. பயமும் பதற்றமும் அவருடைய முகத்தில் மாறி மாறி தோன்றுவதை வீடியோவில் காண முடிகிறது. அப்படி அவர் எதை மறந்தார்? எதற்கு இந்த பதற்றம் என்பதுதான் அந்த வீடியோவை பார்ப்பவர்களின் முதல் கேள்வியாக இருக்கும். அதற்கு அந்த வீடியோவிலேயே பதில் இருந்தது .

பாரிசில் Bastille Day  என்கிற ஒரு முக்கிய நாளில் கொண்டாட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் வந்து கொண்டிருந்த சமயத்தில் பிரெஞ்சு தொழில் துறை பெண் அமைச்சரான Agnes Pannier-Runacher காரிலிருந்து புன்னகையுடன் இறங்கி வருகிறார்.

சற்று நேரத்தில் அவர் பதற்றப்பட்டு தனது காரை நோக்கி ஓட முயற்சி செய்கிறார், ஆனால் அதற்குள் அவருடைய கார் சென்று விடுகிறது. உடனே பதறிப் போய் செக்யூரிட்டியை தொடர்பு கொண்டு காரை திரும்ப அழைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். மேலும் தனது சக அமைச்சரிடம் ஏதோ சைகை காட்டுகிறார். அப்போதுதான் அனைவரும் புரிந்து கொள்கின்றனர், அந்தப் பெண் அமைச்சர் தனது மாஸ்க்கை காரிலேயே மறந்து விட்டு விட்டார் என்பதை.

அதன்பின்னர் ஊழியர் ஒருவர், தான் உபரியாக வைத்திருந்த இன்னொரு மாஸ்க்கை எடுத்து தர, அப்போதுதான் Agnes Pannier-Runacher முகத்தில் நிம்மதி தெரிகிறது. ஆனால் இந்த 35 விநாடியும் இந்த பெண் அமைச்சர் செய்வதை பார்த்தவர்களுக்கு ஒரு திகில் படம் பார்த்த

அனுபவம் கிடைத்ததாக, ஆங்காங்கே பலர் பதிவிட்டு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. French minister Agnès Pannier-Runacher panicked and ran Videoviral | World News.