'பங்களா' ஒண்ண விலைக்கு வாங்கி... 'க்ளீன்' பண்ணலாம்னு உள்ள போனா,,.. பணியாளர்கள் கண்ட 'திடுக்'கிடும் காட்சி... "முப்பது வருஷமா இந்த வீட்ல தாங்க இருக்கு"!!!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பகுதியில், பிரதமர் வீட்டிற்கு அருகேயுள்ள கட்டிடம் ஒன்றை கோடீஸ்வரர் ஒருவர் 35 மில்லியன் யூரோக்கள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.

தொடர்ந்து அந்த கட்டிடத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டி, பணியாளர்களை அனுப்பியுள்ளார். அப்போது அங்கு சென்ற பணியாளர்கள், அந்த கட்டிடத்தினை சுத்தம் செய்ய ஆரம்பித்த நிலையில், அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் திடுக்கிட செய்துள்ளது.
அங்கு இறந்த ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். இதுகுறித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அங்கு வந்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபரின் பெயர் ஜேன் பியரி ரெனாட் என்பது தெரிய வந்தது. இன்னொரு அதிர்ச்சி தகவலாக, அந்த நபர் 30 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்து போனது தடவியல் ஆய்வில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, அவரது உடலில் சில எலும்புகள் முறிவு இருப்பது தெரிந்ததையடுத்து, அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும், இவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்னபே உயிரிழந்ததால், இவரை கொலை செய்த நபரும் தற்போது உயிரோடு உள்ளாரா என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. முப்பது ஆண்டுகளாக ஒருவரது உடல் கட்டிடம் ஒன்றில் கிடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

மற்ற செய்திகள்
