"நாம இப்போ அடுத்த ஆபத்துல இருக்கோம்'... 'புதிதாக பரவும் கொரோனா வைரஸ் குறித்து'... 'அதிர்ச்சி தகவல்!" - எச்சரிக்கும் நாடு
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்சில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் 40 வயதிற்கு உட்பட்டவர்களிடையே அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்தில் சமீபமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதால் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை விட, 40 வயதிற்கு உட்பட்டவர்களிடையே அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "நாம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம். அதிக சோதனைகளால் மட்டுமே அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கண்டறியப்படுவது இல்லை. தற்போது புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை விட, 40 வயதிற்கு உட்பட்டவர்களிடையே 4 மடங்கு அதிகமாக பரவி வருகிறது. அத்துடன், மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு தேவையான புதிய நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும். சமூக விலகல் விதிகளை கடைபிடிக்காமல் இருப்பதே தற்போது நோய் பரவலுக்கான முக்கிய காரணமாக உள்ளது" என எச்சரித்துள்ளார்.