4 வயசு தான்.. ஐன்ஸ்டீனையே மிஞ்சிடுவான் போலயே.. மூளை திறனை டெஸ்ட் பண்ணிட்டு உறைந்துபோன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவனுடைய மூளை திறனை சோதித்த மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | கைவிட்ட கணவன்.. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை.. எக்குத்தப்பா அடிச்ச அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரி..!
இங்கிலாந்தின் சோமர்செட்டின்(Somerset) போர்ட்ஸ்ஹெட் நகரைச் சேர்ந்தவர் டெடி ஹோப்ஸ். தற்போது 4 வயதான டெடி-க்கு விசேஷ சில ஆற்றல்கள் இருந்திருக்கின்றன. அதாவது சிறுவயதிலேயே தொலைக்காட்சியை பார்த்து அதில் வரும் வார்த்தைகளை அப்படியே பேசிக்காட்டுவதை டெடி வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரண விஷயம் போலவே இது தோன்றி இருக்கிறது. ஆனால்.நாட்கள் செல்ல செல்ல டெடி புதிய வார்த்தைகளை வேகமாக கற்றுக்கொள்வதை பார்த்து அவனது பெற்றோர் ஆச்சர்யப்பட்டு உள்ளனர்.
Photograph: Beth Hobbs/SWNS
அதன்பிறகு வார்த்தைகளை நினைவுகொள்வதில் டெடி சிறந்து விளங்குவதை அறிந்த அவனது பெற்றோர் புதிய மொழிகளை அவன் கற்க உதவி செய்திருக்கின்றனர். அதன் விளைவாக மாண்டரின், வெல்ஷ், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட 6 மொழிகளில் வார்த்தைகளை வாசிக்கவும், எண்களை எண்ணவும் டெடி கற்றிருக்கிறான்.
இதை கண்ட நர்சரி ஆசிரியர்கள் ஆச்சர்யப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அறிவுசார் சமூகம் என்று அழைக்கப்படும் Mensa -வில் டெடியின் பெற்றோர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். பொதுவாக Mensa -வில் உறுப்பினராக வேண்டும் என்றால் ஒருவருக்கு 10 வயதை கடந்திருக்க வேண்டும். 3 வயது 7 மாதங்களே ஆன, டெடி-க்கு மூளை திறன் பரிசோதனை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
Image credit : Beth Hobbs / SWNS
அந்த டெஸ்ட்டில் 98 சதவீத மதிப்பெண்கள் எடுத்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார் டெடி. அதன்பிறகு ஸ்டான்ஃபோர்ட் பினெட் தேர்வில் 160க்கு 139 மதிப்பெண்கள் பெற்று, அவரது வயதுக்கு 99.5வது சதவீதத்தில் IQ தேர்வில் வெற்றி பெற்று கடந்த ஆண்டு இறுதியில் மென்சாவில் டெடி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான். இதன்மூலம், மிக இளம் வயதில் இங்கிலாந்தில் இருந்து மென்ஸா-வில் உறுப்பினர் ஆனவர் என்ற பெருமையை டெடி பெற்றிருக்கிறான்.
மிக விரைவில் புத்தகங்களை வாசிக்கும் வழக்கம் கொண்ட டெடி தற்போது ஹாரி பாட்டர் நூலை வாசிக்க திட்டமிட்டுள்ளதாக அவனது பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.
Also Read | "இத சாப்பிட்டு தான் உசுரு பொழச்சாரா?".. 24 நாட்கள் நடுக்கடலில் தவித்த நபர்.. மிரள வைத்த பின்னணி!!

மற்ற செய்திகள்
