"இத சாப்பிட்டு தான் உசுரு பொழச்சாரா?".. 24 நாட்கள் நடுக்கடலில் தவித்த நபர்.. மிரள வைத்த பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்டொமினிகா என்னும் நாட்டைச் சேர்ந்தவர் எல்விஸ் ஃபிராங்கோயிஸ். இவருக்கு 47 வயதாகும் நிலையில் புவேர்ட்டோ பொலிவாருக்கு வடமேற்கே 120 மைல் தொலைவில் தனது பாய்மர படகு ஒன்றில் கடற்கரைக்கு திரும்ப முடியாமல் தனியாக மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.
இதனைத் தொடர்ந்து அவரது படகின் மேலோட்டத்தில் "உதவி" என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டிருப்பதை கண்ட விமானம், பின்னர் அதில் ஒரு நபர் சிக்கித் தவிப்பது பற்றி அறிந்ததை கொலம்பிய கடற்படை அறிக்கை ஒன்றில் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், கடலுக்கு நடுவே சிக்கித் தவித்த எல்விஸ் என்ற நபரை அதிகாரிகள் உதவியுடன் அழைத்து வந்து அவருக்கு மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், அவர் வீடு திரும்புவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, எல்விஸ் அங்கே சிக்கித் தவித்தது பற்றியும் எப்படி அங்கு உயிர் பிழைத்தக் கொண்டார் என்பது பற்றியும் எல்விஸ் தெரிவித்த கருத்து பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
தீவு நாடான டொமினிகாவை சேர்ந்த எல்விஸ் ஃபிராங்கோயிஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பாக செயிண்ட் மார்ட்டின் தீவின் டச்சு பகுதிக்கு அருகே தனது படகை சரி செய்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் மோசமான வானிலை உருவாக எல்விஸின் படகு கடலுக்கு இழுத்து செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.
Images are subject to © copyright to their respective owners.
கடலில் சிக்கித் தவித்த எல்விஸ், சுமார் 24 நாட்கள் அந்த படகிலிருந்து தவித்ததாக தகவல்கள் கூறுகின்றது. இத்தனை நாட்கள் பேச யாரும் இல்லாமலும், என்ன செய்வது என்று தெரியாமலும் குழம்பிப் போன எல்விஸ், மிகவும் கடினமாக அந்த நாட்களை கடந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எல்லா நம்பிக்கையும் தான் இழந்து விட்டதாகவும் குடும்பத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்ட எல்விஸ், கடலில் இருந்து கரையை நோக்கி தனது படகை கொண்டு செல்ல முடியாமலும் அவதிப்பட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இது ஒரு பக்கம் இருக்க இத்தனை நாட்கள் அவர் உண்ட உணவுகள் குறித்த செய்தியும் தற்போது பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது. கைவசம் ஏதும் உணவில்லாமல் அவதிப்பட்ட எல்விஸ் தன்னிடம் இருந்த கெட்சப் பாட்டில், பூண்டு தோல் மற்றும் நூடுல்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டு சிறிது சிறிதாக தண்ணீரில் கலக்கி அதனை உண்டு உயிர்ப்பிழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படி நூடுல்ஸ் மற்றும் கெட்சப் ஆகியவற்றை தண்ணீரில் கலக்கி உண்ட நபர், 24 நாட்கள் நடுக்கடலில் இருந்து கொண்டு உயிர் பிழைத்த சம்பவம், பலரையும் வியப்பிலும் ஆழ்த்தி உள்ளது.
Also Read | கைவிட்ட கணவன்.. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை.. எக்குத்தப்பா அடிச்ச அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரி..!

மற்ற செய்திகள்
