அரசர் சார்லஸிடம் ஒப்படைக்கப்பட்ட புகழ்வாய்ந்த RED BOX.. அப்படி என்ன இருக்கும் அதுக்குள்ளே..? அரச குடும்பம் வெளியிட்ட புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தின் அரசர் பொறுப்பை மூன்றாம் சார்லஸ் ஏற்றதை தொடர்ந்து அவரிடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரெட் பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை அரச குடும்பம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
இரண்டாம் எலிசபெத்
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.
His Majesty The King’s Red Box 🧰
The Red Box contains papers from government ministers in the UK and the Realms and from representatives from the Commonwealth and beyond. pic.twitter.com/C4JrXHS3uO
— The Royal Family (@RoyalFamily) September 23, 2022
ரெட் பாக்ஸ்
இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மறைந்ததை முன்னிட்டு, அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ், அரச பொறுப்பை ஏற்றிருக்கிறார். பக்கிங்காம் அரண்மனையில் உள்ள அலுவலக அறையில் அவர் இருக்கும் புகைப்படத்தை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. அவருக்கு அருகே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரெட் பாக்ஸ்-ம் இருக்கிறது. முன்னதாக இரண்டாம் எலிசபெத் இதே பெட்டியுடன் இருக்கும் பல புகைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில், முதன்முறையாக பொறுப்பை ஏற்றுக்கொண்ட சார்லஸ் அந்த ரெட் பாக்ஸ்-ஐ வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்ளே என்ன இருக்கும்?
பிரிட்டன் ஆட்சியாளரிடம் இருக்கும் இந்த சிவப்புப் பெட்டியில் UK மற்றும் ராஜ்யங்களில் உள்ள அரசாங்க அமைச்சர்கள் மற்றும் காமன்வெல்த் மற்றும் பல பிரதிநிதிகளின் ஆவணங்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், அரச குடும்பம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. .