கைவிட்ட கணவன்.. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை.. எக்குத்தப்பா அடிச்ச அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jan 25, 2023 10:06 AM

கொலம்பியாவில் கணவன் கைவிட்ட  நிலையில் வீட்டு வாடகை கூட செலுத்தமுடியாத நிலையில் தவித்த பெண்மணிக்கு இரண்டு லாட்டரிகளில் ஜாக்பாட் அடித்திருக்கிறது.

Woman dumped by husband celebrates double lottery jackpot win

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஒண்ணில்ல, ரெண்டில்ல".. 38 வருஷம் கழிச்சு பெற்ற தாயை முதல் முறையா பார்த்த பெண்.. கல்லும் கரையும் எமோஷனல் பின்னணி!!

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி எப்போது வரும் என்பதை யார்தான் சொல்ல முடியும்? ஆனால் இப்படியும் ஜாக்பாட் ஒருவருக்கு அடிக்குமா? என கேட்க வைத்திருக்கிறார் கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

கொலம்பியாவின் Barranquilla பகுதியை சேர்ந்தவர் அந்த பெண். கடந்த வருடம் இவருடைய கணவர் இவரை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார். தோழியுடன் தனது கணவர் சென்றுவிட, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார் அந்த பெண். தொடர்ந்து, சில மாதங்களில் பிரச்சனை மேலும் அதிகரித்திருக்கிறது.

Woman dumped by husband celebrates double lottery jackpot win

Image Credit: Getty Images

கல்லூரியில் படித்துவந்த தனது மகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கனவே வாங்கிய கடன்களால் வசித்துவரும் வீட்டை இழக்கும் நிலைக்கு அந்த பெண் தள்ளப்பட்டிருக்கிறார். அப்போது, தனக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டதை உணர்ந்து மிகுந்த சோகத்தில் பெண்மணி தவித்திருக்கிறார்.

எதிர்பாராத திருப்பங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போடும் வல்லமை படைத்தவை. அது இந்த பெண்மனியின் வாழ்விலும் உண்மை ஆகியிருக்கிறது. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா? என்ற ஏக்கத்தில் இரண்டு லாட்டரி டிக்கெட்களை வாங்கியிருக்கிறார். அவர் நினைத்தபடியே நடந்தும் இருக்கிறது. இரண்டு லாட்டரிகளிலும் அவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. அதுவும் 268,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 2.7 கோடி ரூபாய்) தொகை பரிசாக கிடைக்கவே தன்னுடைய மொத்த கஷ்டங்களையும் தற்போது தீர்ந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் அவர்.

Woman dumped by husband celebrates double lottery jackpot win

Image Credit: istock

தனக்கு பரிசு கிடைத்த உடனேயே முன்னாள் கணவர் தனக்கு போன் செய்து வாழ்த்தியதாகவும், இனி வாழ்க்கையில் எதை நினைத்தும் கவலைகொள்ள தேவையில்லை எனவும் புன்னகையுடன் தெரிவித்திருக்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பெண்மணி.

Also Read | AR Rahman : "என் எல்லா கச்சேரிக்கும் இந்த கிளி வேணும்.."... மல்லிப்பூ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய கிளி.. ஏ.ஆர்.ரஹ்மான் வைரல் பதிவு..!

Tags : #WOMAN #HUSBAND #LOTTERY #JACKPOT #WIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman dumped by husband celebrates double lottery jackpot win | World News.