CARDIAC ARREST IN SOUTH KOREA HOLLOWEEN : 150 பேர் உயிரை குடித்த ஹாலோவீன் திருவிழா .. மாரடைப்பிலும் கூட்ட நெரிசலிலும் கொத்து கொத்தாக மரண ஓலம்.. தென் கொரியாவில் சோகம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் கொரியா நாட்டில் ஹாலோவீன் விழாவிற்காக மக்கள் கூடி இருந்த நிலையில், இதனிடையே நடந்த சம்பவம் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஹாலோவீன் (Halloween) பண்டிகை என்பது பல உலக நாடுகளில் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இட்டவோன் என்னும் நகர் அமைந்துள்ளது. இங்கே ஒவ்வொரு வருடமும் ஹாலோவீன் திருவிழா நடப்பது வழக்கம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, கொரோனா தொற்று காரணமாக ஒரு சில ஆண்டுகள் இங்கே விழா நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், கொரோனா தொற்று காலத்திற்கு பின்னர், முகக்கவசம் இன்றி ஹாலோவீன் திருவிழாவில் கூடலாம் என்றும் அனுமதி வழங்கப்படிருந்ததால் ஏரளமான மக்கள் கூடி இருந்தனர்.
சுமார் 1 லட்சம் பேர் வரை அங்கே திரண்டிருந்த நிலையில்; அந்த இடமே திருவிழா கோலம் பூண்டிருந்துள்ளது. இதன் காரணமாக, கூட்ட நெரிசலும் அங்கே உருவாகி உள்ளது. இதற்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு பலரும் சிக்கிக் கொண்டனர். இதனால், பலரும் கீழே விழ தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நெரிசலில் எக்கச்சக்க மக்கள் சிக்கிக் கொள்ள, கூட்டத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், சியோலில் நடைபெற்ற இந்த ஹாலோவீன் திருவிழாவில் இதுவரை 155 க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு மூலம் பலி ஆனதாகவும் வீடியோக்கள் பரவி வருகிறது. அதே போல, 150 க்கும் மேற்பட்டோர் வரை நெரிசலில் காயம் அடைந்திருப்பதாகவும், இன்னும் பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தவிர, இன்னும் ஆயிரக்கணக்கானோர் கூட்ட நெரிசலில் சிக்கி கிடப்பதால் பலி எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் பலியாகி வரும் சம்பவம், தென் கொரியா மட்டுமில்லாமல் உலக நாடுகளையும் கடுமையாக உலுக்கி உள்ளது.

மற்ற செய்திகள்
