ஓடும் ரயிலில் இருந்து இளைஞரை கீழே தள்ளிவிட்ட நபர்.. கைமீறிய வாக்குவாதத்தால் நடந்த பயங்கரம்.. அலறிய பயணிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்குவங்க மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவரை சக பயணி ஒருவர் கீழே தள்ளிவிட்ட சம்பவம் பலரையும் திடுக்கிட செய்திருக்கிறது.

Also Read | "ஓவியா கூட ஒருபடம் நடிச்சாச்சா.?".. GP முத்து சொல்லிய தகவல்.. ஆகா இதுதான் கேரக்டரா..?
மேற்குவங்க மாநிலத்தின் பீர்பம் மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சியளிக்க கூடிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஹவுரா - மால்டா இடையே சென்றுகொண்டிருந்த ரயிலில் சஜால் ஷேக் என்பவர் பயணித்திருக்கிறார். அப்போது, சக பயணிகள் சிலர் ஷேக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து, ஷேக்கை ஒருவர் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனிடையே ஷேக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்.
ரம்புராத் ரயில்வே நிலையத்திற்கு அருகே கீழே விழுந்த ஷேக்கை ரயில்வே காவல்துறையினர் காப்பாற்றி ராம்புராத் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது ஷேக்கின் நிலைமை சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
காவல்துறையினர் ஷேக்கிடம் விசாரணை நடத்தியதில் ரயிலில் பயணித்த சிலர் முகம் சுளிக்கும் வகையில் பேசிக்கொண்டு வந்ததாகவும் அப்போது அவர்களிடம் அதுகுறித்து தான் கேட்டதாகவும் கூறியுள்ளார் ஷேக். இதன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒருகட்டத்தில் ஆத்திர மிகுதியில் ஒருவர் தன்னை ரயிலில் இருந்து கீழே தள்ளியதாகவும் காவல்துறையினரிடத்தில் தெரிவித்திருக்கிறார் ஷேக்.
இதுபற்றி அவர் காவல்துறையினரிடம் பேசுகையில்,"நான் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். ரயில் பெட்டியில் மூன்று நான்கு பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தரக்குறைவான கருத்துகளை அவர்கள் கூறினர். அருகில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. ஆகவே அப்படி பேசாதீர்கள் என கூறினேன். அது என் தவறுதான். அவர்களில் ஒருவர் எழுந்து வந்து என்னை காலரைப் பிடித்து மிரட்டினார். அவரை பயமுறுத்த நினைத்தேன். ஆனால் அடுத்த வினாடி நான் தண்டவாளத்தில் கிடந்தேன். கண்மூடி திறக்கும் வேளையில் இது நடந்துவிட்டது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டேன்.சுயநினைவுக்கு வந்தபோது தண்டவாளத்தில் படுத்திருந்தேன். வலியால் கை, கால், தலை எல்லாம் மரத்துப் போயிருந்தது" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரயில்வே காவல்துறையினர் இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர். அந்த நேரத்தில் ரயிலில் பயணித்தவர்களின் விபரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | Bigg Boss Tamil : "இருக்குற வரை இருப்பேன்..".. குடும்பத்தை நினைத்து கேமரா முன் கலங்கிய GP முத்து..!

மற்ற செய்திகள்
