இந்தா வந்துருச்சுல்ல.. ‘சாண்டா அண்ட் தி மெர்மெய்ட்’.. VGP மெரைன் கிங்டமில் வேற லெவல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Dec 21, 2022 11:45 PM

VGP MARINE KINGDOM இந்த பண்டிகைக் காலத்தில் மற்றொரு அற்புதமான ஷோவை கொண்டு வந்துள்ளது. இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு,  டிசம்பர் 23 முதல் ஜனவரி 1, 2023 வரையிலான நாட்களில், மெகா கடல் மீன் தொட்டிகளில் காணப்படும் ஷோ நடக்கிறது. இதற்கென ஐரோப்பாவில் இருந்து வருகை தந்துள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற தேவதைக் கலைஞரைக் கொண்டு வந்துள்ளார்கள்.

Santa and Mermaid christmas underwater show VGP Marine Kingdom

சாண்டாவின் தொலைந்து போன கிறிஸ்துமஸ் பரிசுகளை கண்டுபிடிப்பதற்கு இந்த தேவதை உதவ வேண்டும். அதற்காக, நீருக்கடியில் தேவதைக் கலைஞர் திகழ்வார். இந்த ஷோ விளையாட்டு தினமும் 4 முதல் 5 முறை நடக்கும் மற்றும் குழந்தைகளின் குதூகலத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு அற்புதமான சாகசமாகவும் இது இருக்கும், அதே சமயம் இது குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வையும் இந்த ஷோ கற்றுக்கொடுக்கிறது.

VGP மரைன் கிங்டம் கடந்த ஆண்டு இதேபோல் ரியல் கதாபாத்திரங்களை கொண்டுவந்தது. அதேபோல் இம்முறையும் கடல் தேவதை மற்றும் ஸ்கூபா சாண்டா, கடற்கொள்ளையர் கலிகோ ஜாக்கை எதிர்கொள்கிறார்கள், சாண்டா மற்றும் மெர்மெய்டு இறுதியில் தங்கள் பரிசுகளை திரும்பப் பெற்றார்களா? என்பதுதான் சுவாரஸ்யம்.  சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான VGP மெரைன் கிங்டமில் டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கி, நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சிகள் இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்கப்பாதை நிகழ்வாக நடக்கவுள்ளது.

இந்த நடைப்பயண சுரங்கப்பாதை முழுவதும் மீன்கள் கண்ணாடிக்குள் தெரியுமாறு, பார்வையாளர்கள் காணும் வகையில் நீந்தும். 1000 க்கும் மேற்பட்ட அயல்நாட்டு மீன்கள், சுறாக்களின் இருப்பிடமாக இவ்விடம் உள்ளது. முந்தைய நிகழ்ச்சிகளில் ஹைட்ரோமேன், ஸ்கூபா விநாயகர் மற்றும் ஸ்கூபா சாண்டா ஆகியவை அடங்கும். பல திரைப்பட படப்பிடிப்புகளுக்காகவும் இந்த இடம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.

Santa and Mermaid christmas underwater show VGP Marine Kingdom

டிசம்பர் 23, 2022 முதல் ஜனவரி 1, 2023 வரையிலான இந்த பண்டிகைக் காலத்தில் “சாண்டா அண்ட் தி மெர்மெய்ட் - தி பெர்ல் ஆஃப் ஆர்லாஃப்” ஷோ, தினசரி 4 காட்சிகளாக 11AM, 12:30PM, 3PM & 5PM ஆகிய நேரங்களில் நடக்கும், பெரியவர்களுக்கு ரூ.695 மற்றும் ஜூனியர்களுக்கு ரூ.595 கட்டணமான நுழைவுச் சீட்டுடன் காட்சி இலவசம் (90 முதல் 125 செ.மீ. வரை) SAVE10PR எனும் விளம்பரக் குறியீட்டை http://www.vgpmarinekingdom.in வெப்சைட்டில் பயன்படுத்தி டிக்கெட்டில் 10% தள்ளுபடியைப் பெறலாம். மேலும் தகவல்களை +918939932222 என்கிற எண்ணில் பெறலாம்.

Tags : #VGP MARINE KINGDOM #SANTA AND THE MERMAID #CHRISTMAS #CHRISTMAS 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Santa and Mermaid christmas underwater show VGP Marine Kingdom | Tamil Nadu News.