'நாடே கதறிக்கிட்டு இருக்கு'... 'ஆபத்துன்னு தெரிஞ்சும்'... 'பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் செஞ்ச வேலை'... அதிர்ந்துபோன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 22, 2020 05:33 PM

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அமெரிக்காவில் அதன் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன்காரணமாக அமெரிக்காவில் சமூக விலகலும், ஊரடங்கும் அமலில் உள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற அனைத்து விதமான நிறுவனங்களும், வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அவசர தேவையைத் தாண்டி யாரும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.

Facebook will take down posts promoting Anti-Stay-at-Home protests

இந்தசூழ்நிலையில் வீட்டில் யாரும் தனிமையில் இருக்க வேண்டாம், வீதியில் வந்து போராடலாம் என சிலர் கூட்டம் கூட்டி வருகிறார்கள். வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டாம், வெளியே வந்து போராட வேண்டும் என்று கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது, இந்த நேரத்தில் இதுபோன்று பதிவிடுவது நிலைமையை இன்னும் மோசமடைய செய்யும் என அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

இதையடுத்து இந்தப் பதிவுகள் அரசு விதிமுறைகளுக்கு எதிரானவை என்பதால் இவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் கூறியுள்ளார்.