'காசு, துட்டு, மணி' லாக்டவுனுக்கு மத்தியிலும்... 'பணமழையில்' நனையும் நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்லாக்டவுனுக்கு மத்தியிலும் அம்பானியின் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பணமழையில் நனைந்து வருகிறது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனத்தின் 9.9% பங்குகளை அண்மையில் பேஸ்புக் நிறுவனம் 43,574 கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்து வாங்கியது. டெக் உலகின் முன்னணி நிறுவனமான பேஸ்புக், ஜியோவில் முதலீடு செய்தது கொரோனாவிற்கு மிகப்பெரிய பேசுபொருளாக விளங்கியது.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த முதலீட்டின் படி ஜியோ தளத்தின் மொத்த பங்கு மதிப்பு 4.90 லட்சம் கோடி ரூபாயும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் மிகவும் குறுகிய காலத்திலேயே சுமார் 49 ஆயிரம் கோடி ரூபாய் ஜியோவுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி, ''அனைத்து இந்தியர்களின் நலனுக்காக இந்திய டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை தொடர்ந்து வளர்ப்பதற்கும் மாற்றுவதற்கும் சில்வர் லேக்கை மதிப்புமிக்க பங்களிப்பாளராக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.
பேஸ்புக் நிறுவனத்தின் முதலீட்டை அடுத்து, சில்வர் லேக் நிறுவனமும் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது வணிக உலகில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.