'16 ஆயிரத்தை' தாண்டிய பலி எண்ணிக்கை... 'கொரோனா' தோன்றிய சீனாவை விட... 'இந்த' நாடுகளில் தான் இறப்பு எண்ணிக்கை அதிகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Mar 25, 2020 12:52 AM

உலகளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் என்னும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 10,000 பேர் கொரோனா வைரஸ்க்கு பலியாகி இருக்கின்றனர்.

Europe’s Coronavirus death toll passes 10,000 Details Here!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளில் உள்ள மக்களுக்கு பரவி இருக்கிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருக்கிறது. இதனால் அங்கு இறப்பு விகிதமும் எக்கச்சக்கமாக உள்ளது.

சீனாவில் இந்த வைரஸ்க்கு 3270 பேர் பலியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை 6077 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதையடுத்து ஸ்பெயின் நாட்டில் 2,206 பேர் பலியாகி உள்ளனர். இதற்கடுத்து ஈரானில் 1812 பேர் பலியாகி இருக்கின்றனர். உலகளவில் கொரோனா வைரஸால் அதிகளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் பட்டியலை கீழே காணலாம்.

1.இத்தாலி - 6,077

2.சீனா - 3,270

3.ஸ்பெயின் - 2,207

4.ஈரான் - 1,812

5.பிரான்ஸ் - 860

6.அமெரிக்கா - 504

7.இங்கிலாந்து - 335

8.நெதர்லாந்து - 213

9.சுவிட்சர்லாந்து - 118

10.ஜெர்மனி - 118

11.தென்கொரியா - 111

12.பெல்ஜியம் - 88

13.இந்தோனேசியா - 49

14.ஜப்பான் - 41

15.பிலிப்பைன்ஸ் - 33

16.துருக்கி - 30 

17.பிரேசில் - 25

18.ஸ்வீடன் - 25

19.போர்ச்சுகல் - 23

20.ஈராக் - 23

21.ஆஸ்திரியா - 21

22.சான் மரினோ - 20

23. கிரீஸ் - 17

24.அல்ஜிரியா - 17

Tags : #HOSPITAL