சைலண்டாகவே இருந்த CO-PILOT.. விளையாடுறாருன்னு நெனச்சு தரையிறக்கிய விமானி.. அப்புறம் தான் விஷயமே தெரிஞ்சிருக்கு..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் விமான ஓட்டுநர் பயிற்சியாளர் மரணமடைந்த நிலையில் சக பைலட் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். அதன் பிறகே அங்கிருந்தவர்களுக்கு அவர் இறந்த விபரம் தெரிய வந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பாகிஸ்தானில் இருந்து காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த இளம்பெண்... ஒரே வாட்சப் காலில் மாறிப்போன வாழ்க்கை..
அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை என பலரும் பல இடங்களில் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அப்படித்தான் இங்கிலாந்தின் உள்ள பிரபல விமான நிலையத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இங்கிலாந்தின் லங்காஷைரில் உள்ள பிளாக்பூல் விமான நிலையத்தில் விமானிகளுக்கான பயிற்சி நடைபெறுவது வழக்கம். இங்கே விமானிகளுக்கான பயிற்சியில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் காற்று வீசும் பகுதியில் விமானத்தை இயக்க முடிவெடுத்த பயிற்றுவிப்பாளர் 4 விமானிகளை உடன்வருமாறு அழைத்திருக்கிறார். அப்போது, விமானியின் இருக்கையில் பயிற்றுவிப்பாளரும் அவர் அருகே விமானி ஒருவரும் அமர்ந்திருக்கின்றனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயிற்றுவிப்பாளர் திடீரென பின்பக்கம் சாய்ந்து அமர்ந்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
அதனை கண்ட விமானி அவர் தூங்குவது போல நடிப்பதாக நினைத்திருக்கிறார். தொடர்ந்து விமானத்தை தனியாகவே இயக்கி மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கி உள்ளார் அந்த விமானி. ஆனாலும், அருகில் சாய்ந்து படுத்திருந்த பயிற்றுவிப்பாளர் எழுந்துகொள்ளதால் சந்தேகம் அடைந்த விமானி அவரை தொட்டு எழுப்பியிருக்கிறார். நிலைமை கைமீறி சென்றுவிட்டதை உணர்ந்த அவர் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
அப்போது, ஏர் ஆம்புலன்ஸ், மீட்புப்படை வீரர்கள் விரைந்து சென்று அந்த பயிற்றுவிப்பாளரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனாலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து உயிரிழந்த பயிற்றுவிப்பாளரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் இறப்பிற்கான காரணம் மாரடைப்பு என குறிப்பிடப்பட்டிருக்கிறது. விசாரணையில் உயிரிழந்த நபர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து உயர் ரத்த அழுத்தத்திற்காக மருந்துகள் உட்கொண்டு வந்ததும் தெரியவந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் பற்றிய தகவல் அதிகாரிகளால் பொதுவெளியில் பகிரப்பட்டிருக்கிறது.