104 பேர் மரணமடைந்த விமான விபத்து.. கடைசியா பைலட் சொன்ன வார்த்தை.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயின் நாட்டில் பல வருடங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளான விமானம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இது தற்போது அந்நாட்டு மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | வழுக்கை தலை உடையவர்களுக்கு மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம்.. முதல்வருக்கு சென்ற கோரிக்கை..!
ஸ்பெயின் நாட்டில் வெலென்சியா விமான நிலையத்தில் இருந்து பலேரிக் தீவுக்கு பறந்தது ஐபீரியா 602 விமானம். குறுகிய தூரம் என்றாலும் ஒருபக்கம் கடலும், மற்றொரு பக்கம் உயரமான மலைகளும் நிரம்பிய பகுதி அது என்பதால் விமானிகள் மிக கவனமாகவே விமானத்தை தரையிறக்க வேண்டியிருக்கும். 1972 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி 37 வயதான ஜோஸ் லூயிஸ் பாலேஸ்டர் செபுல்வேடா இந்த விமானத்தை இயக்கினார்.
6 விமான குழுவினர் மற்றும் 98 பயணிகள் இருந்த இந்த விமானம் 7 ஆம் ரன் வே-யில் தரையிறங்க தயாரானது. அப்போது, விமானத்தின் உயரத்தை 5000 மீட்டராக குறைக்க விமானி ஜோஸ் லூயிஸ் பாலேஸ்டர் செபுல்வேடா அனுமதி கேட்டிருக்கிறார். அதன்பின்னர் விமானத்தின் உயரம் குறைக்கப்பட்டது. பின்னர் தரையிறங்கிவதற்கு விமானம் தயாரான நிலையில், மீண்டும் விமானத்தின் உயரத்தை குறைக்க விமானி முடிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து அறிவுரைகளை விமானிக்கு இபிஸா விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அளித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென விமானம் விபத்துக்குள்ளாயிருக்கிறது. நொடிப்பொழுதில் அருகில் இருந்த Atalayasa மலைமீது விமானம் மோதியது. இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். விமானம் 2000 மீட்டருக்கு கீழே பறந்துகொண்டிருந்த போது Atalayasa மலை மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விமானத்தில் இருந்த பைலட் கடைசி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுடன் பேசியது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அப்போது, விமானத்தின் உயரத்தை குறைக்க அனுமதி கேட்ட விமானி, "நாங்கள் வந்துவிட்டோம். எனக்கான மதுவை தயார் செய்து வையுங்கள்" என ஜாலியாக கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த பேச்சுவார்த்தையில் விமானி கால்பந்து குறித்தும் அதிகாரிகளுடன் பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும், விமானத்தின் உயரத்தை குறைக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது அந்நாட்டு மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | தன்னை பாராட்டி கோலி போட்ட போஸ்ட்.. பாத்துட்டு சூரிய குமார் யாதவ் கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!