திடீர்னு ஹாஸ்பிட்டலில் அட்மிட்டான மணப்பெண்.. திருமணம் நடக்குமான்னு கலங்கி நின்ன பெண்வீட்டார்.. தாலியுடன் என்ட்ரி கொடுத்த மாப்பிள்ளை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 24, 2023 05:59 PM

திருமணத்திற்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையிலேயே தம்பதியின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இது அந்தப் பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Marriage held at Hospital after bride admitted for surgery

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | 512 கிலோ வெங்காயத்தை விற்க 70 கிமீ பயணித்த விவசாயி.. கொடுத்த தொகையை பார்த்து கண்ணீர் விட்ட சோகம்..!

தெலுங்கானா மாநிலம், சென்னூர் மண்டலம் லம்பாடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷைலஜா. இவருக்கும் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இருவீட்டார் தரப்பிலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் சைலஜாவிற்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சைலஜாவை அனுமதித்திருக்கின்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக சைலஜாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர். அதன்பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மணமகள் சைலஜாவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மீண்டும் திருமண ஏற்பாடுகளை செய்ய முடியுமா என சைலஜாவின் குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையில் இருந்திருக்கின்றனர்.

Marriage held at Hospital after bride admitted for surgery

Images are subject to © copyright to their respective owners.

அப்போது அவர்களது கவலையை துடைத்திருக்கிறார் மாப்பிள்ளை திருப்பதி. மேலும் மருத்துவமனையிலேயே மிகவும் எளிமையாக சைலஜாவை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாக திருப்பதி தெரிவித்து இருக்கிறார். இதனால் அங்கிருந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தவுடன் உடனடியாக இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதன்படி நிச்சயக்கப்பட்டபடி சைலஜா திருப்பதி ஜோடிக்கு மருத்துவமனையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

Marriage held at Hospital after bride admitted for surgery

Images are subject to © copyright to their respective owners.

நெருங்கிய உறவினர்கள் சிலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் மருத்துவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் பரிசு பொருட்களையும் வழங்கி இருக்கின்றனர். உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணப்பெண்ணுக்கு மருத்துவமனையிலேயே மாப்பிள்ளை தாலி கட்டிய சம்பவம் அந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

Also Read | பாகிஸ்தானில் இருந்து காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த இளம்பெண்... ஒரே வாட்சப் காலில் மாறிப்போன வாழ்க்கை..

Tags : #TELANGANA #MARRIAGE #MAN #HOSPITAL #BRIDE #SURGERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Marriage held at Hospital after bride admitted for surgery | India News.