ஜெயிச்சுட்ட மாறா.. சின்ன வயசுல அம்மா ஆசைப்பட்ட விஷயம்.. விமானி ஆனதும் நிறைவேற்றிய மகன்.. கலங்க வச்ச பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்விமானி ஒருவர் தன்னுடைய அம்மாவின் நெடுநாள் ஆசையை நிறைவேற்றிவிட்டதாக எழுதிய பதிவு பலரையும் உணர்ச்சிவசப்பட செய்திருக்கிறது. இந்நிலையில் அந்த பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "எனது வருங்கால மனைவி இப்படி இருக்கணும்".. ஜோடோ யாத்திரையில் மனம் திறந்த ராகுல் காந்தி..!
பொதுவாகவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எந்த வித சிரமங்களையும் எதிர்கொள்ள தயாராகவே இருப்பார்கள். தங்களுடைய மகன் மற்றும் மகள்கள் சாதிக்க பல இடையூறுகளை பெற்றோர்கள் சந்திக்கவும் தயங்குவது இல்லை. குழந்தைகளை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வதையே ஒவ்வொரு பெற்றோரும் தங்களது வாழ்வின் மிக முக்கியமான கடமையாக கருதுகின்றனர். அப்படி பெற்றோரின் ஆசைப்படி நல்ல நிலைக்கு சென்ற நபர்கள் தங்களது வாழ்க்கை குறித்து பேசுகையில் அது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துவிடும். அப்படியான நிகழ்வு தான் ஒரு விமானியின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
விமானியாக பணிபுரிந்து வருபவர் அமீர் ரஷீத் வாணி. இவர் பள்ளி செல்லும்போது இவருடைய தாய் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். அதாவது, படித்து விமானியானதும் விமானத்தில் என்னை இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு அழைத்துச் செல்லும்படி தனது மகனுக்கு ஒரு லெட்டர் எழுதியிருக்கிறார் ரஷீத்தின் தாய். இந்நிலையில், தனது தாயுடைய ஆசையை சமீபத்தில் நிறைவேற்றியுள்ளார் ரஷீத்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்,"சிறுவயதில் நான் படித்த பள்ளிக்கு எனது அம்மா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை என் நெஞ்சோடு வைத்துக்கொள்ள சொன்னார். அதில்,"நீ ஒருநாள் விமானி ஆனதும் உன்னுடைய விமானத்தில் என்னை மெக்காவுக்கு அழைத்துச் செல்" என எழுதியிருந்தது. இன்று புனித தலமான மெக்காவுக்கு என்னுடைய பயணத்தில் எனது அம்மாவும் ஒரு பயணியாக அமர்ந்திருக்கிறார். நான் அதே விமானத்தில் விமானியாக உள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு பலரையும் நெகிழ செய்திருக்கிறது. இப்பதிவில் ஒருவர்,"இதனை படித்தவுடன் எனது கண்கள் கலங்கிவிட்டன" என கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொருவர்,"விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதுவும் இந்த உலகில் சாத்தியமே. உங்களுடைய அம்மாவின் கனவுகள் கைகூடிவிட்டன" என கமெண்ட் செய்திருக்கிறார்.
Also Read | ரோட்ல தலைகீழா ஓடிய கார்.. அலறிய பொதுமக்கள்.. அப்புறம் தான் விஷயமே தெரிஞ்சிருக்கு.. உலக வைரல் வீடியோ.!

மற்ற செய்திகள்
