கையிலே ஆகாசம்.. முதன்முதலில் மகள் ஓட்டிய விமானத்தில் பயணித்த அப்பா.. .. நெகிழ்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது முதல் விமான பயணத்திற்கு முன்னர் தனது தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார் பெண் விமானி ஒருவர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | 30 வருஷம் யாராலுமே தொட முடியாத மாஃபியா மன்னன்.. கடைசில சுலபமா சிக்கிய சம்பவம்.. இதை யாருமே எதிர்பார்க்கல..!
பொதுவாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எத்தனை பெரிய தடைகளையும் எதிர்கொள்ள தயங்குவது இல்லை. தங்களது வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் எதையும் தங்களது பிள்ளைகள் எதிர்கொள்ள கூடாது என்பதே அவர்களது முதன்மை ஆசையாக இருக்கும். அரும்பாடுபட்டு வளர்த்த தங்களது குழந்தைகள் நல்ல நிலைக்கு செல்லும்போது அதனை கண்டு பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. அப்படியான வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேப்டன் க்ருடாட்னியா ஹேல் எனும் பெண் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 7 ஆம் தேதி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். விமானி பயிற்சியை முடித்த கேப்டன் க்ருடாட்னியா ஹேல் தனது முதல் பயணத்துக்கு முன்பு தனது தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். விமானியாக ஆன பின்னர் மகிழ்ச்சியுடன் பயணியாக வந்திருக்கும் தனது தந்தையை அணைத்துக்கொள்கிறார் கேப்டன் க்ருடாட்னியா ஹேல்.
இதனை கண்ட சக பயணிகள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ இதுவரையில் 8.3 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. விமானி கேமராவை பார்த்து கையசைப்பதில் துவங்கும் இந்த வீடியோவில், பின்னர் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் தனது தந்தையிடம் சென்று ஆசீர்வாதம் பெறும் காட்சிகள் பார்ப்போரை உணர்ச்சிவசப்பட செய்திருக்கிறது.
மேலும், அந்த வீடியோவில் ஹேல்,"எப்போதும் என் பெற்றோரின் ஆசீர்வாதமின்றி என் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. பயிற்சி காலத்தில் சில சமயங்களில் நான் அதிகாலை 3-4 மணிக்கு வீட்டை விட்டு புறப்படுவேன். என் பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பர். அப்போதும் அவர்களது கால்களைத் தொடாமல் வீட்டை விட்டு வெளியேறுவது இல்லை. அப்படி செய்யாவிட்டால் நாள் முழுமையடையாது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.