அப்டியே நில்லுங்க.. 'இந்திய' விமானத்தை 'அந்தரத்தில்' நிறுத்தி.. விசாரித்த பாகிஸ்தான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Oct 18, 2019 11:54 AM
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை பாகிஸ்தான் அந்தரத்தில் நிறுத்தி விசாரணை செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவ்வப்போது பிரச்சினைகள் எழுகின்றன. அடிக்கடி பாகிஸ்தான் எல்லை மீறுவதும் அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி டெல்லியில் இருந்து 120 விமானிகளுடன் காபூல் நோக்கி பறந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு எப்-16 விமானங்கள் நடுவானில் வழிமறித்தன. தொடர்ந்து முதலில் தாழ்வாக பறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளன.
பதிலுக்கு இது போர்விமானம் அல்ல, பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானம் என ஸ்பைஸ்ஜெட் விமானி பதில் அளித்துள்ளார். இதனை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைவரை ஸ்பைஸ்ஜெட் விமானத்துடன் பாகிஸ்தான் விமானங்கள் பறந்து சென்று, மீண்டும் திரும்பியுள்ளன.
இந்த சம்பவம் நடந்து சுமார் 1 மாதங்கள் கழிந்த நிலையில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
