"டிக்கிலோனா" தெரியும் ... அது என்ன "டல்கோனா"? ... ஊரடங்கில் வைரலாகும் புதிய "வீடியோ"!
முகப்பு > செய்திகள் > உலகம்ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் பொழுது போக பல்வேறு வேடிக்கையான செயல்களிலும் ஈடுபட்டு அதனை வீடியோவாக இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் எதாவது ஒரு விஷயம் ட்ரெண்டில் இருக்கும். ஐஸ் பக்கெட் challenge, கிகி Challenge என பல்வேறு சவால்களை இணையவாசிகள் வீடியோ எடுத்து வெளியிட்டு வருவர். அதே போல் தற்போதைய இந்த ஊரடங்கு சமயத்தில் டல்கோனா காஃபி என்ற பெயரில் வீடியோவை பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த டல்கோனா காஃபி சாதாரண காஃபியை போல செய்வதற்கு மிகவும் எளிதாக காஃபி தூள், சர்க்கரை, சுடுதண்ணீர் ஆகியவற்றை நடனராக கலக்கி அதன் மீது குளிரூட்டப்பட்ட கரைசலை பாலின் மீது வைத்துவிட்டால் டல்கோனா காஃபி தயார். வீட்டில் இருக்கும் இந்த சமயத்தை டல்கோனா காஃபி உருவாக்கி வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். டல்கோனா காஃபி வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
I just use 2gram Nescafe classic because My stomatch hurt drink kafein and milk... #dalgonacoffee pic.twitter.com/KhDG2k0l5v
— ⁷Friska Dhamayanti Putri || 💜💜💜⁷ (@Friska_Dhama) April 5, 2020
