'மேன் வெர்சஸ் வைல்ட்' படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்... சிரித்துக் கொண்டே 'ரஜினி' சொன்ன விஷயம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 29, 2020 06:17 AM

’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சிக்காக கர்நாடக வனப்பகுதிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Rajinikanth injured in Karnataka Man VS wild show

பியர் கிரில்ஸ் என அனைவராலும் அறியப்படும் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ், பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது உலகின் முக்கிய வனப்பகுதிகளில் பிரபலங்களுடன் சுற்றி வந்து 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி பலராலும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபூர் புலிகள் வனப்பகுதியில் இதற்கான படப்பிடிப்பில், பியர் கிரில்ஸ் உடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இதற்காக இன்றும், ஜனவரி,30ம் தேதியும் தலா 6 மணிநேரம் படப்பிடிப்பு நடத்த வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் தனக்கு பெரிய காயம் எதுவும் இல்லை என்றும், காட்டு முள் குத்தியதால் காலில் லேசான வலி இருப்பதாகவும் சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

Tags : #RAJINIKANTH #MAN VS WILD #BEAR GRYLLS #KARNATAKA #INJURED