குட்டி பூனை ஒன்று பானை செய்ய கற்றுக்கொள்ளும் கியூட் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | நகைக்கடை சுவரில் இருந்த ஓட்டை.. உரிமையாளருக்கு ஷாக் கொடுத்த திருடர்கள்..தூத்துக்குடியில் பரபரப்பு..!
மனிதன் ஆதிகாலம் முதலே, பூனைகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்த்து வந்ததற்கான பல ஆதாரங்கள் இருக்கின்றன. பழங்காலத்தில் உலகின் சில பகுதிகளில் பூனைகளை கடவுளாக வழிபட்ட மக்களும் இருந்திருக்கிறார்கள். துறுதுறு என நம்மை சுற்றி வலம் வரும் பூனைகள் நம்மை மகிழ்விக்க எப்போதும் தவறுவதே இல்லை. செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் செய்யும் அட்டகாசமான கியூட் சம்பவங்களை வீடியோவாக எடுத்து மக்கள் சமூக வலை தளங்களில் பதிவிடுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இந்த பூனைகளின் வீடியோக்களை பார்க்கவே லட்சக்கணக்கான நெட்டிசன்களும் ஆர்வத்துடன் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பானையும் பூனையும்
அப்படி பானை செய்ய கற்றுக்கொள்ளும் பூனையின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பானை செய்யும் வீலில் மண்ணை குழைத்து, பானையை உருவாக்கி கொண்டிருக்கிறார் ஒருவர். அதனை ஒரு பூனை அருகில் இருந்து கண்கொட்டாமல் பார்க்கிறது.
பிறகு தயங்கி தயங்கி வீலில் சுற்றும் பானையின் மீது பூனை கால் வைக்கிறது. இதனால் பானையின் மேல் பக்கம் சற்று வளைகிறது. இதனை அந்த பூனையின் உரிமையாளர் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார். மேலும், அங்கிருந்து நகராமல் அந்த பானையையே உற்றுப் பார்க்கிறது பூனை.
14 மில்லியன்
இந்த வீடியோவை இதுவரையில் 14 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் இதில் கமெண்ட் போட்டும் வருகின்றனர். அப்படி இந்த கமென்டிலும் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார் டாப்பர் டான் என்பவர். அதில் ஆர்வமாக ஒருவர் பானை செய்ய, அவரது தோளில் தொங்கியபடி அதனை அதே ஆர்வத்துடன் பார்க்கிறது ஒரு பூனை. இப்படி தங்களுடைய பூனைகள் செய்த கியூட் ரகளைகளையும் கமெண்டாக போட்டு வருகிறார்கள் பல பூனை பிரியர்கள்.
Pawtery cat.. 😅 pic.twitter.com/jqQt6cn4kZ
— Buitengebieden (@buitengebieden_) April 17, 2022

மற்ற செய்திகள்
