இந்த பூனையை கண்டுபிடிச்சு கொடுத்தா ரூ.5000 சன்மானம்.. அடையாளம் என்ன தெரியுமா..? வித்தியாசமாக விளம்பரம் கொடுத்த நபர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காணாமல் போன வளர்ப்பு பூனையை கண்டுபிடித்து தரக்கோரி ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கவனம் பெற்று வருகிறது.
கோவை மாவட்டம், ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவர் கடந்த 6 வருடங்களாக வெளிநாட்டு வகை பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி திடீரென இந்த பூனை காணாமல் போயுள்ளது. எங்கு தேடியும் பூனையை கண்டு பிடிக்க முடியவில்லை.
அதனால் பூனையை கண்டுபிடித்து தரக்கோரி கிருபாகரன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில் காணாமல் போன பூனை குறித்த தகவல் கிடைத்தாலோ அல்லது கண்டுபிடித்துக் கொடுத்தாலோ ரூபாய் 5000 சன்மானமாக கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பூனைக்கு அடையாளமாக உதட்டில் மச்சம் இருக்கும் என்றும் அதன் பெயர் ஜெசி என்றும், வயது 6 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.