நகைக்கடை சுவரில் இருந்த ஓட்டை.. உரிமையாளருக்கு ஷாக் கொடுத்த திருடர்கள்..தூத்துக்குடியில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் நகைக்கடை சுவரில் துளையிட்டு அங்கிருந்த வெள்ளி மற்றும் தங்கத்தினாலான பொருட்களை திருடிச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் வள்ளிநாயகபுரம் பகுதியில் உள்ள சாந்தி நகரை சேர்ந்தவர் முருகன். இவர் சிதம்பரம் நகரில் எம்எம்எஸ் என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் முருகன். மீண்டும் இன்று காலை கடையை திறக்க சென்ற முருகனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
திருட்டு
கடையின் பூட்டை திறந்த முருகன், உள்ளே பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அப்போது சுவரில் பெரிய துளை ஒன்று போடப்பட்டிருப்பதை பார்த்து திகைத்திருக்கிறார் முருகன். இதனை அடுத்து தெற்கு காவல் நிலையத்தில் தனது நகைக்கடையில் இருந்த 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் கொடுத்திருக்கிறார்.
விசாரணை
முருகன் அளித்த புகாரின் அடைப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து ஆய்வு செய்தார்.
முருகனின் நகைக்கடை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தனிப்படை
பூட்டிய கடைக்குள் பின்பக்க சுவற்றில் துளையிட்டு 6 கிலோ வெள்ளி மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடைக்கடையின் சுவற்றில் துளையிட்டு அங்கிருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.