VIDEO: என்ன தாண்டி 'எப்படி' உள்ள போறன்னு நானும் பாக்குறேன்...! 'கெத்து காட்டிய பூனை...' - நெகிழ வைக்கும் 'வைரல்' வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉரிமையாளர் வீட்டுக்குள் நுழைய முயன்ற 4 அடி பாம்பை பூனை ஒன்று தடுத்து நிறுத்திய சம்பவம் புவனேஸ்வரில் நடந்துள்ளது.
![Bhubaneswar cat stopped 4-foot snake enter owner\'s house Bhubaneswar cat stopped 4-foot snake enter owner\'s house](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/bhubaneswar-cat-stopped-4-foot-snake-enter-owners-house.jpg)
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் பீமாட்டங்கி நகரில் வசித்து வருபவர் சம்பத் குமார் மற்றும் பரிதா. இவர்கள் தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக சின்னு என்னும் பூனையை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சின்னு வீட்டின் பின்பக்கத்தில் எதையோ பார்த்து, சம்பத் முன் வந்து திருதிருவென்று முழித்து மீண்டும் வேகமெடுத்து வீட்டின் பின்புறத்திற்கு ஓடியது.
இதை கவனித்த பின்பக்கம் சென்று பார்த்தபோது பூனை தன் உரிமையாளரின் வீட்டினுள் நுழைய முயன்ற 4 அடி நீள நல்ல பாம்பை காட்டிக்கொடுத்துள்ளது.
பாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பத் அங்கிருக்கும் பாம்பாட்டிக்கு தகவல் தெரிவித்து வரச்சொல்லியுள்ளார். அதுவரை சின்னு வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திக்கொண்டு இருந்தது.
பாம்பாட்டி வர 30 நிமிடங்கள் ஆனாலும் அதுவரை நின்ற இடத்தை விட்டு பாம்பு நகராமல் சின்னு பார்த்து கொண்டு காவலுக்கு நின்றது. பூனையின் இந்த செயல் காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)