'நான் ஒருத்தன் உள்ள இருக்குறது தெரியாம...' 'என்ன எங்க கூட்டிட்டு போறீங்க...' 'நடுவானில் கோபத்தில் கொந்தளித்த பூனை...' - இது என்னடா புது வம்பா போச்சு...!
முகப்பு > செய்திகள் > உலகம்சூடான் நாட்டு விமானம் ஒன்று கடந்த புதன்கிழமை அன்று புறப்பட்ட கொஞ்சம் நேரத்திலேயே கார்ட்டூம் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது. அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கு காரணம் விமானத்தில் மறைந்திருந்த பூனை. அந்த பூனை கடும் கோவமாக இருந்தது. கோபமாக இருந்த பூனை ஒன்று விமானியை தாக்கியது. கத்தார் தலைநகரான தோஹாவுக்குச் செல்லும் சூடானின் டர்கோ விமானம் கார்ட்டூம் சரவதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களில் விமானியின் அறைக்குள் நுழைந்த அந்த பூனை விமானிகள் மீது பாய்ந்து அவர்களை தாக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, வேறு வழியின்றி விமானத்தை மீண்டும் கார்ட்டூம் சரவதேச விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முடிவு செய்துள்ளார்.
பூனை பயணிகள் விமானத்தின் விமானிகளுக்கான அறையில் பதுங்கி இருந்துள்ளது. அதுமட்டுமின்றி பூனை மிகுந்த கோபத்துடனும் காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து தரையிறங்குமாறு தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், பூனை எவ்வாறு விமானத்திற்குள் சென்று பதுங்கியது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து விமானத்தில் இருந்து பூனையை வெளியேற்றிய பின்னரும் இரவு முழுவதும் அந்த விமானம் புறப்படாமல் தாமதமானவே சென்றுள்ளது.
இந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மற்ற செய்திகள்
