'பூனைக்கு வளைகாப்பு...' 'என்ன தான் பூனைனாலும்...' - எங்களுக்கு பொண்ணு மாதிரி தானே...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதாங்கள் ஆசையாக வளர்த்த பூனை கர்ப்பமாக இருப்பதால் அதற்கு வளைகாப்பு செய்து வைத்துள்ளனர் புதுச்சேரியை சேர்ந்த குடும்பத்தார்.

புதுச்சேரி மாவட்டம், மூலக்குளத்தைச் சேர்ந்த சாந்தா என்பவரின் குடும்பத்தார் தங்களின் வீட்டில் ஒரு பெண்ணாகவே ஒரு பூனையை வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் ஆசையாக வளர்த்த பூனை தற்போது கர்ப்பமடைந்துள்ளதால், அந்த பூனைக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளார் சாந்தா. என்னதான் நமக்கு அவை பூனை என்றாலும் சாந்தாவிற்கு அது பெண் தானே. ஆகையால் தன் உறவினர்களையெல்லாம் அழைத்து தான் வளர்க்கும் பூனை வளைகாப்பு நடத்தியுள்ளார்.
பூனைக்கு நலங்கு வைத்து, மாலை போட்டு அனைவரும் வாழ்த்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரவி வைரலாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், வளையலுக்கு பதிலாக கால்களில் பேண்ட் கட்டியும், 7 வகையான தட்டுகளில் நலங்கு பொருட்கள், பூனைக்கு பிடித்த உணவுகளையும் வைத்திருந்தனர்.
வளைகாப்பு நடத்திய அடுத்த நாளே பூனைக்கு 4 குட்டிகள் பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
