‘யாராவது காப்பாத்துங்க’!.. வெறிகொண்டு துரத்தி வந்த பாம்பு.. பதறியடித்து ஓடிய நபர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொலப்பசியோடு பூனையை சாப்பிட விடாமல் துரத்தி வந்த பாம்பின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் நொந்தபுரி (Nonthaburi) பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர், தனது வீட்டின் முன் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது சுமார் 10 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வந்துள்ளது. அது வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த தனது வளர்ப்பு பூனையை சாப்பிட வேகமாக சென்றுள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே பூனை தூக்கிவிட்டு, உதவிக்கு அருகில் உள்ளவர்கள் அழைத்துள்ளார். ஆனால் அதற்குள் பாம்பு வேகமாக அவர்களை துரத்தி வந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
வேகமாக வந்த பாம்பு வீட்டின் கதவுக்கு முன்னால் அப்படியே நின்றது. உடனே வீட்டு ஜன்னல் வழியே வெளியே வந்த நபர், வீட்டுக் காவலரை அழைத்துள்ளார். இவை அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
