Udanprape others

VIDEO: 'ஒருத்தருக்கு' கூடவா இந்த பூனைக்கு 'ஹெல்ப்' பண்ணனும்னு தோணல...! 'சரி நானே போய் பண்றேன்...' - தூக்குன அடுத்த செகண்ட் அப்படியே 'நடுங்கி' போய்ட்டாரு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Oct 20, 2021 04:33 PM

தெலங்கானா மாநிலம் ஓய்.எஸ்.ஆர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் கொண்டா ராகவ ரெட்டி என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நஷ்கலப்பள்ளி கிராமம் அருகே காரில் போயுள்ளார்.

Telangana ysr Spokesperson lifted a tiger cub as a cat

அப்போது சாலை ஓரத்தில் பூனை ஒன்று தலையில் சொம்பு மாட்டிக் கொண்டதால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. இதைக்கண்ட ராகவ ரெட்டிக்கு மனம் இளகியது. பூனையின் கழுத்தில் மாட்டியிருக்கும் சொம்பை எடுத்து உதவலாம் என காரை நிறுத்த சொல்லியிருக்கிறார்.

பின்பு, காரில் இருந்து இறங்கி அந்த பூனையை அல்லேக்காக தூக்கினார். அப்போதுதான் தாம் தூக்கியது பூனைக்குட்டி அல்ல புலிக்குட்டி என தெரிந்திருக்கிறது. உடனே பதற்றத்தில் கீழே போட்டுவிட்டு அவர் கார் அருகே ஓடினார்.

அதன்பிறகு புலிக்குட்டியும் அங்கிருந்து புதருக்குள் ஓடி மறைந்து விட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இது குறித்து கொண்டா ராகவ ரெட்டி காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். புலிக்குட்டியை கண்டிப்பாக பிடித்து விடுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், கொண்டாராகவ ரெட்டி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஊசி போட்டுக்கொண்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Telangana ysr Spokesperson lifted a tiger cub as a cat | India News.