கடந்த 2 வாரங்களில் '27 டாலர்' கச்சா எண்ணெய் 'விலை' குறைவு... பெட்ரோல் விலையோ 'பைசாக்களில்' மட்டுமே குறைப்பு... 'கொள்ளை' லாபம் அடிக்கும் 'எண்ணெய்' நிறுவனங்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்சர்வதேச அளவில் கச்சா எண்ணைய் விலை கடும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை பைசா அளவில் மட்டுமே குறைக்கப்பட்டு வருகிறது.

70-க்கும் மேற்பட்ட நாடுகளில் விமான போக்குவரத்து முடங்கியதால் எரிபொருள் தேவை குறைந்துள்ளது. இந்த சூழலில் சவுதி அரேபிய மற்ற நாடுகளை விட 4 மடங்கு விலைகுறைத்து கச்சா எண்ணெய் மற்ற நாடுகளுக்கு வழங்கி வருகிறது.
ஏற்கெனவே கொரோனா அச்சுறுத்தலால் எரிபொருள் தேவை குறைந்துள்ள நிலையில், சவுதியின் இந்த அதிரடி முடிவால் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை நாள் தோறும் மாற்றி அமைக்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள், சமீப நாட்களாக பைசா அளவில் மட்டுமே விலையை குறைத்து வருகிறது.
கடந்த 2 வாரங்களில் மட்டும் 27 டாலர்கள் அதாவது 31 சதவிகிதம் அளவிற்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இந்த விலையை அடிப்படையாக வைத்து பார்த்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைந்த பட்சம் 15 ரூபாய் குறைந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த 22-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 35 பைசாவை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளது என்பது தான் கசப்பான உண்மை.
சர்வதேச அளவில் விலை உயர்ந்தால் அதிரடியாக விலையை அதிகரிக்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள், விலை சரிந்தால் மட்டும் அதன் பலனை வாகன ஓட்டிகளுக்கு அளிக்காமல் கொள்ளை லாபம் அடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
