'சேலத்துல' இருக்காருயா எங்க ஊரு 'எடிசன்'... 'ஷாக்' அடிக்காத மின்சார ஒயர்.. பெட்ரோலுக்கு பதிலாக 'கால்சியம் கார்பைட்' வாட்டர்... 'அசத்தும் தம்பி'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக கால்சியம் கார்பைட்டை தண்ணீரில் கலந்து பயன்படுத்தும் புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதைப் பார்த்தால் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு பழங்காலத்தைப் போல் மாட்டு வண்டியில் தான் பயணிக்க வேண்டுமோ என அச்சம் கொள்ளும் நிலை வந்து விட்டது. தற்போது உலகில் இயற்கையாக கிடைக்கும் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. விரைவில் மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கர்கள் கண்டுபிடிப்பார்கள் அதை அதிக விலைக்கு வாங்கி நாம் பயன்படுத்துவோம் என்று இல்லாமல், நமது ஊரிலேயே ஒரு மாணவர் பெட்ரோலுக்கு மாற்று வழி கண்டுபிடித்துள்ளார்.
பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் பட்டயப்படிப்பு படிக்கும் தட்சிணாமூர்த்தி மாணவர்தான் இந்த சாதனைக்கு சொந்தக் காரர். இவர் ஏற்கெனவே தொட்டாலும் ஷாக் அடிக்காத மின்சார ஒயர்கள், மின்சாரம் இல்லாமல் இயங்கும் மின்விசிறி போன்ற தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகிறார்.
அடுத்தகட்ட முயற்சியாக கால்சியம் கார்பைட் கற்களை தூளாக்கி அதனை நீரில் கரைத்து அதன்மூலம் பைக்கை இயக்கும் வழிமுறையை இவர் உருவாக்கியுள்ளார். மாணவரின் இந்த கண்டுபிடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.