சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்!... காரணம் என்ன?... தற்போதைய நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 02, 2020 01:26 PM

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது.

cooking gas cylinder prices slashed heavily this month

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை போறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மானியம் இல்லா சமையல் எரிவாயு சிலிண்டர் 590 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. இந்நிலையில் மானியம் இல்லாத சமையல் சிலிண்டரின் விலை நேற்று மாற்றம் செய்யப்பட்டது.

இதனால், மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் 55 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் 150 ரூபாய் விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த வாரம் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் 881 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 55 ரூபாய் குறைந்து 826 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 

Tags : #GAS #CYLINDERS #PRICE