2 பேருக்கும் 100 வயசு.. 79 வருஷ இல்லற வாழ்க்கை.. "மரணம் கூட இப்டி தான் வரணும்ன்னு இருக்கு பாருங்க".. மனதை ரணமாக்கிய சோகம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Dec 14, 2022 09:32 PM

79 ஆண்டுகள் ஒன்றாக இணைந்து வாழ்ந்த தம்பதிக்கு நேர்ந்த சம்பவம் குறித்த செய்தி, தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

couple both aged 100 years passed away just hours apart

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவர் ஹுபர்ட் மேலிகோட். இவரது மனைவியின் பெயர் ஜூன். இந்த தம்பதியருக்கு திருமணமாகி 79 ஆண்டுகள் ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், ஹுபர்ட் - ஜூன் தம்பதிக்கு 3 பிள்ளைகள், 7 பேரப் பிள்ளைகள் மற்றும் 11 கொள்ளுப் பேரன் மற்றும் பேத்திகள் உள்ளதாகவும் தெரிகிறது.

கடந்த 1941 ஆம் ஆண்டு, தேவாலயம் ஒன்றில், ஹுபர்ட் மற்றும் ஜூன் ஆகியோர் முதன் முதலில் சந்தித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சுமார் ஒரு வருடம் கழித்து ஜூனிடம் தனது காதலையும் ஹுபர்ட் வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அமெரிக்க கடற்படையில் ஹுபர்ட் வேலை பார்த்து கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ஜுனும் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார்.

couple both aged 100 years passed away just hours apart

இதன் பின்னர், அடுத்து ஒரு வருடத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், கடந்த 79 ஆண்டுகளாக சிறந்த கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் 100 வயதான நிலையில், சமீபத்தில் 79 ஆண்டு திருமண நாளையும் அவர்கள் கொண்டாடி உள்ளனர். அப்போது, நீண்ட மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு காரணம் என்ன என கேட்ட போது, வாக்குவாதத்தில் இருவரும் ஈடுபடுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, கடந்த சில தினங்கள் முன்பாக ஜூனுக்கு உடல்நிலை பாதிக்கிப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மனைவியின் நிலை அறிந்து ஏக்கத்தில் ஹுபர்ட்டிற்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி ஜூனை சேர்த்த மருத்துவமனையில் ஹுபர்ட்டையும் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர்.

couple both aged 100 years passed away just hours apart

ஐந்து நாட்கள் ஜூன் மற்றும் ஹுபர்ட் ஆகியோர் நினைவில்லாமல் இருந்த நிலையில், திடீரென தூக்கத்திலேயே ஹுபர்ட் உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கடுத்து, ஹுபர்ட் இறந்து சுமார் 20 மணி நேரத்தில் அவரது மனைவி ஜுனும் உயிரிழந்தார். இருவருக்கும் 100 வயதாகும் நிலையில், 79 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து மரணத்தில் கூட பிரியாமல் சென்றுள்ள விஷயம், பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது.

Tags : #LOVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Couple both aged 100 years passed away just hours apart | World News.