கேன்சரால் பாதிக்கப்பட்ட காதலி.. "சிகிச்சை'ல இருந்தப்போ" ஆசையா கேட்ட விஷயம்.. களத்தில் இறங்கி அசத்திய காதலன்!!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் இணையத்தில் அதிக நேரத்தினை செலவிடுகிறோம்.

அப்படி இதில் ஏராளமான நேரம் உலவும் போது, நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் குறித்தும் நிறைய தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
அவற்றுள் வினோதமான, மகிழ்ச்சி நிறைந்த அதிர்ச்சி கலந்த என வகை வகையாகவும் வீடியோக்கள் அல்லது செய்திகளை நாம் காண முடியும்.
அப்படி இருக்கும் போது, நாம் பார்க்கும் சில விஷயங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக உணர வைக்கும். அது மட்டுமில்லாமல், இன்னும் ஒரு படி மேலே போய் ஒருவித தாக்கத்தை கூட நமக்கு உருவாக்கும். அந்த வகையில் ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது.
சார்லி மற்றும் ஹன்னா என்ற ஜோடி, சமீப காலமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், ஏராளமான இடங்களுக்கு சுற்றுலா சென்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி இருக்கையில், ஒரு கட்டத்தில் ஹன்னாவுக்கு புற்றுநோய் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், ஆரம்பத்தில் ஹன்னா மற்றும் சார்லி ஆகிய இருவரும் அதிர்ந்து போயுள்ளனர். இருந்தாலும், உடனிருந்து நம்பிக்கை கொடுத்துள்ளார் சார்லி. தொடர்ந்து, ஹன்னாவுக்கு அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இதனிடையே, எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஹன்னா, துருக்கியில் கப்படோசியாவில் பலூன்கள் பறப்பதை பார்க்க வேண்டும் என விரும்பி உள்ளார். சிகிச்சை பெற்று வந்த ஹன்னாவிடம், கீமோதெரபி சிகிச்சை முடிந்த பின்னர் துருக்கி அழைத்து செல்வதாகவும் உறுதி அளித்துள்ளார் சார்லி. இதன் பின்னர், ஹன்னாவுக்கு கீமோ சிகிச்சையும் வெற்றிகரமாக முடிய இருவரும் இணைந்து துருக்கி சென்றுள்ளனர்.
அது மட்டுமில்லாமல், அங்கே சென்று பலூனிலும் அவர்கள் பறந்து பயணமும் மேற்கொண்டுள்ளனர். ஹன்னாவுக்கு கீமோதெரபி சிகிச்சை நடந்தது முதல் துருக்கி சென்றது வரை தொடர்பான ஒரு தொகுப்பு வீடியோவை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர்கள் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் ஒரு நிமிடம் மனம் கிறங்கி போயுள்ளனர். மேலும், இந்த ஜோடியை பாராட்டியும், ஹன்னாவின் உடம்பை பார்த்துக் கொள்ளும் படியும் கமெண்ட்டுகளை குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
