இதல்லவோ PROPOSAL.. காதலியை திகைக்க வைச்ச இளைஞர்.. கடைசியில நடந்த வாவ் மொமெண்ட்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Oct 19, 2022 06:49 PM

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் பாடலுக்கு நடனமாடியபடி காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Man Proposes To Girlfriend by dancing Video goes viral

காதல் பல வினோதமான காரியங்களில் மனிதர்களை ஈடுபட வைக்கும். தங்களது காதலுக்கு உரியவர்களை கவர, என்னவேண்டுமானாலும் செய்ய காதலர்கள் தயங்குவதில்லை. குறிப்பாக இணையை பார்க்க காதலர்கள் எடுக்கும் முயற்சிகள் வெகு  சுவாரஸ்யமானவை. அதிலும், முதன்முதலில் தங்களது காதலை வெளிப்படுத்த மனிதர்கள் எடுக்கும் முயற்சிகள் சுவாரஸ்யமிக்கவை. ஒருபுறம், தங்களது காதலை, தங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்திவிட துடிப்பவர்கள், எந்த துணிச்சலான காரியத்திலும் ஈடுபடுவார்கள். அந்த வகையில் இளைஞர் ஒருவர் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் முன்பு தனது காதலியை கவர நடனமாடுகிறார்.

Man Proposes To Girlfriend by dancing Video goes viral

இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதேபோல, இந்த இணை குறித்தும் தகவல்கள் பகிரப்படவில்லை. இந்த வீடியோவில், ஈபிள் டவர் அருகே ஆற்றங்கரையில் ரோஜா இதழ்களால் 'Marry Me'  என்ற அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சிவப்பு கம்பள விரிப்பில் இருபுறமும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.

இந்த செட்டப்பை பார்த்து அந்த இளம்பெண் திகைத்து நிற்க அவருக்கு அடுத்த ஆச்சர்யத்தை அளிக்கிறார் இளைஞர். பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கானின் குச் குச் ஹோதா ஹை (Kuch Kuch Hota Hai) படத்தில் வரும் கோய் மில் கையா (Koi Mil Gaya) பாடலுக்கு அந்த இளைஞர் நடனமாடுகிறார்.

Man Proposes To Girlfriend by dancing Video goes viral

இளைஞர் நடனமாட, அதனை பிரம்மிப்போடு பார்த்துக்கொண்டிருந்த இளம்பெண்ணும் உடன் சேர்ந்து ஆடுகிறார். இந்த வீடியோவை 3.1 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். மேலும், 18 ஆயிரம் பேர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர். இதனிடையே நெட்டிசன்கள்,"ஸ்வீட் ப்ரோபோசல்" என்றும்,"முன்கூட்டியே திட்டமிட்டு இந்த இளைஞர் செயல்பட்டிருக்கிறார்" என்றும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர். இது ஒருபக்கம் இருந்தாலும் பலரும் இந்த இளைஞரின் முயற்சிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags : #LOVE #PROPOSAL #VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man Proposes To Girlfriend by dancing Video goes viral | World News.