VIDEO: ஸ்ரேயாஸ்க்கு 'லக்' அதிகம்.. அவ்வளவு வேகமா பந்து போட்டும் பெயில்ஸ் விழுகல.. சோகமான வங்கதேச அணி.. புஜாரா & ஸ்ரேயாஸ் ரியாக்ஷன் தான் அல்டிமேட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேச சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்கள் ஆடி வருகிறது.
இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்ற நிலையில், 2 போட்டிகளில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி, தொடரை (2-1) கைப்பற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தது.
வங்க தேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வியடைந்த பிறகு, இந்தியா தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இந்த தொடரின் முதல் ஆட்டம் தற்போது சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணியின் டாப்-ஆர்டர் வழக்கம் போல சரிவை சந்தித்தது. ஸ்டாண்ட்-இன் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி 41 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 7 ரன்களுக்குள் கில், ராகுல், விராட் கோலி என 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 48-3 என்ற நிலையில் இந்தியா தத்தளித்தது.
பின்னர் ரிஷப் பந்த் 45 ரன்கள் எடுத்து இந்தியாவை சரிவில் இருந்து மீட்டார். 6-வது இடத்தில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 149 ரன் பார்ட்னர்ஷிப்பை புஜாராவுடன் சேர்ந்து அமைத்தார். 203 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து சேட்டேஷ்வர் புஜாரா ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை நெருங்கியுள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 278/6 ரன்கள் எடுத்துள்ளது, இன்றைய நாளின் கடைசி பந்தில் அக்சர் படேல் அவுட் ஆகினார்.
இந்திய அணியின் இந்த இன்னிங்ஸின் 84வது ஓவரில், ஸ்ரேயாஸ் ஐயர் பக்கம் 'லக்' அடித்தது. பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் எபடோட் ஹொசைன் வீசிய அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில், ஸ்ரேயாஸ் ஐயர் (ஸ்விங் பந்தில்) போல்ட் ஆனார்.
இருப்பினும், பந்து ஸ்டம்பில் பட்டாலும், பெயில்கள் விழவில்லை. பெயில்களின் விளக்குகள் எரிந்தன. மேலும் பெயில்கள் கொஞ்சம் மேலே எழும்பின, ஆனால் விழவில்லை. கிரிக்கெட் விதிப்படி பந்து ஸ்டெம்பில் பட்டாலும் பெயில்ஸ் விழ வேண்டும்.
இதனால் வங்க தேச அணியினர் சோகத்தில் மூழ்கினர். களத்தில் நின்ற புஜாரா & ஷ்ரேயாஸ், இந்நிகழ்வால் மகிழ்ச்சியில் சிரித்து கொண்டனர்.
An incredible sequence of play in the #BANvIND Test match as @ShreyasIyer15 is bowled by Ebadot Hossain but the 𝗯𝗮𝗶𝗹𝘀 𝗷𝘂𝘀𝘁 𝗿𝗲𝗳𝘂𝘀𝗲 𝘁𝗼 𝗳𝗮𝗹𝗹 🤯
Your reaction on this close 'escape' ❓🤔#SonySportsNetwork #ShreyasIyer pic.twitter.com/q6BXBScVUz
— Sony Sports Network (@SonySportsNetwk) December 14, 2022