48 வயசுல விவாகரத்து.. துணை தேடி செயலியில் நேரம் செலவிட்ட பெண்.. "இப்டி ஒரு ட்விஸ்ட் நடக்கும்'ன்னு எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க"
முகப்பு > செய்திகள் > உலகம்காதல் என்பதற்கு கண்ணில்லை என வாக்கியம் ஒன்று உள்ளது. அதாவது காதல் என்பது ஜாதி, மதம், இனம், மொழி, வயது என எந்த விஷயத்தையும் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் மனதை அறிந்து கொண்டு வரும் காதல் அனைத்து தடைகளையும் தாண்டி உன்னதமாகவும் உயர்ந்து நிற்க வழி செய்யும்.
அந்த வகையில், வயது பணம் உள்ளிட்ட பல விஷயங்களை தாண்டி ஏற்பட்டுள்ள காதல் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
US'ஐ அடுத்த டெக்சாஸ் என்னும் பகுதியை சேர்ந்தவர் Rachel Caudele. இவருக்கு தற்போது 50 வயதாகிறது.
இதனிடையே, கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார் ரேச்சல். மேலும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் அவருக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து தனக்கு ஒரு துணை வேண்டும் என்றும் ரேச்சல் முடிவு செய்துள்ளார். இதற்காக, டேட்டிங் செயலி மூலம் சிலரிடம் பேச அவர் முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆரம்பத்தில் சில மோசமான ஆண்களால் ரேச்சலுக்கு நேரக் கூடாத சம்பவங்கள் நேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், அலெக்ஸ் மைக்கேல் என்ற வாலிபரிடம் பேச ஆரம்பித்துள்ளார் ரேச்சல்.
தொடர்ந்து, மைக்கேலிடம் பேசும் போது தன்னை விட 23 வயது குறைந்த இளைஞர் என்பது தெரிந்ததும் அதிர்ந்து போயுள்ளார் ரேச்சல். ஆனாலும், வாலிபருடன் நிறைய விஷயங்கள் ரேச்சலுக்கு ஒத்து போனதாக கூறப்படுகிறது. இதனால், வயது வித்தியாசம் என்பதை தாண்டி ரேச்சல் மற்றும் மைக்கேல் ஆகியோர் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் தொடங்கி உள்ளனர்.
தொடர்ந்து, நியூயார்க் பகுதியில் வசித்து வரும் மைக்கேலை பார்க்க நேராக சென்றுள்ளார் ரேச்சல். இதன் பின்னர் இருவரும் இணைந்து பல இடங்கள் சுற்றித் திரிந்துள்ளனர். மறுபக்கம், ஒன்றாகவும் அவர்கள் வசிக்கத் தொடங்கியதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ரேச்சலின் உறவை அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதே வேளையில் அலெக்ஸ் மைக்கேலின் குடும்பத்தினர், வயது வித்தியாசத்தை காரணம் காட்டி அவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், பலரும் இவரது உறவை விமர்சித்து வரும் நிலையில், அவை அனைத்தையும் தாண்டி ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் ரேச்சல் மற்றும் மைக்கேல் ஆகியோர்.
Also Read | 4வது திருமணம் ஆன 4 மாதத்தில் காணாமல் போன புதுப்பெண்.! விசாரணையில் காத்திருந்த ட்விஸ்ட்..!